பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை!

பிரதமர் வருகையால் பள்ளியில் தொழத் தடை! INTJ கண்டனம் .

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாத்திமா பீவி கவர்னராக இருக்கும் போது ஒரு பள்ளி வாசல் கட்டப்பட்டு அங்கு பணிபுரியும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அப்பகுதி முஸ்லிம்களும் தொழுது வருகின்றனர்.

தற்போது பிரதமரின் வருகையை ஒட்டி அந்தப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்கள் உள்ளே சென்று தொழத் தடை விதித்து பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்துள்ளனர்.

இது பற்றி பகுதி முஸ்லிம்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தகவல் தர மாநிலப் துணை பொது செயலாளர் செய்யது இக்பால் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் கேட்ட போது , அது எங்களின் தவறு அல்ல !தற்போது அந்த கவர்னர் மாளிகை மத்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டப்பாட்டில் உள்ளது !   இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு வழக்கம் போல் அனுமதிக்கப் படும் !   என சொன்ன போது இக்பால் தனது கண்டனத்தை காவல் துறை அதிகாரிகளிடம் buy Bactrim online பதிவு செய்தார்.


கண்டன சுவரொட்டி  

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் துரோகத்தால் பாபர் மஸ்ஜிதை இழந்த முஸ்லிம்கள் தற்போது காங்கிரஸ் பிரதமரால் இரண்டு நாள் வழிபாட்டு உரிமையை இழந்துள்ளனர். இவர்கள் ஆட்சியில் இரண்டு நாள் என்றால் நாளை அத்வானியோ, மோடியோ அந்த பிரதமராக வந்தால் நம் நிலை என்ன ? இந்திய அரசியல் சட்ட சாசனப்படி நம் வழிபாட்டு உரிமையை மறுக்க எந்தக் கொம்பனுக்கும்   அதிகாரமில்லை என்பதை ஆளும் வர்கத்திற்க்கு அறிவிக்கவேண்டும் ! காங்கிரஸ் கட்சிக்கு நம் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.

-செங்கிஸ் கான்.

Add Comment