வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: நவ.30-க்குள் உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்

வேலைவாய்ப்பற்றோர் buy Amoxil online உதவித்தொகை பெற, நவ. 30-ம் தேதிக்குள் உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜயசேகரன் நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறுவோர், ஆண்டுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணம் சமர்ப்பித்து ஓராண்டு பூர்த்தியான பயனாளிகள், இந்த ஆண்டும் நவ. 30-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உதவித்தொகை வழங்க இயலாது.

சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வரும்போது அசல் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம்,

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அனுமதிக்கப்பட்டதற்கான ஆணை ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

Add Comment