கடலூர் சின்னாபின்னமானது. மிக மோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 40 பேர் பலி

தானே’ புயல் கோரத்தாண்டவத்துக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் சின்னாபின்னமானது. மிக மோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான படகுகள் நொறுங்கின. புதுச்சேரி தெருக்கள் எல்லாம் அலங்கோலமாயின.

நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் புதுச்சேரியில் இருந்து 90 கி.மீ தொலைவில் நிலை கொண்டு நகர தொடங்கியது. நேற்று அதிகாலை 4 மணியளவில் புயல் ஆக்ரோஷமடைந்தது. காலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரை ‘தானே’, தாண்டவம் ஆடியது. பயங்கரமான இரைச்சலுடன் சூறைக் காற்று வீசியது.

தென்னை மரங்கள், மின் கம்பங்கள் தலை திருகினாற் போல் திருகி விழுந்தது. கூரை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. பெரிய விளம்பர நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர்கள் மற்றும் கடைகளின் முன் வைக்கப்பட்டிருந்து பேனர்களும் புயலின் சீற்றத்துக்கு இரையாயின. சுவர்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான கூரை வீடுகள் மீது மரங்கள் விழுந்தது.

மரம், சுவர் இடிந்து விழுந்தது உள்பட புயலுக்கு கடலூரில் 28  பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கான பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.  500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், கம்பிகள் சேதமடைந்தன. சுமார் க்ஷீ 5 ஆயிரம் கோடி பொருட்கள் சேதமடைந்துள்ளன. மின்விநியோகம் சீராக குறைந்தது 15 நாள் ஆகும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போக்குவரத்து துண்டிப்பு: தானே புயலால் சென்னை&புதுச்சேரி இசிஆர் சாலை மற்றும் புதுவை&சிதம்பரம் சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி, சிதம்பரம், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் போக்குவரத்து துண்டிப் பானது. இதுபோன்று விருத்தாசலம், வடலூர், திட்டக்குடி Buy Ampicillin Online No Prescription உள்ளிட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகரங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பானது.

புதுச்சேரியில் 7 பேர் பலி: ÔதானேÕ புயல் புதுவை மாநிலத்தையும் நிலைக்குலைய செய்தது. புயலுக்கு 7 பேர் இறந்தனர். புதுச்சேரியில் கடற்கரை சாலை நாசமானது. அதுபோல, சூறைக் காற்றில், முக்கிய வீதிகள் பல சின்னாபின்னமாயின. விளம்பர போர்டுகள்,கூரைகள் எல்லாம் பிய்த்தெறியப்பட்டன. சென்னையில்: சென்னை பெரம்பூரில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். அதேபோல ஆவடியில் மின்கம்பியை மிதித்த ஒருவர் பலியானார். காஞ்சிபுரத்தில் 3 பேர் மழைக்கு பலியாகினர்.

Add Comment