இலங்கையிடம் வீழ்ந்தது ஆஸி.,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான “டுவென்டி-20′ போட்டியில் தில்ஷன், சங்ககரா அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா வந்துள்ள இலங்கை அணி ஒரு “டுவென்டி-20′ மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நேற்று “டுவென்டி-20′ போட்டி நடந்தது. “டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஹாடின் நம்பிக்கை:
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (2), மைக்கேல் கிளார்க் (16) வாட்சன் (4), டேவிட் ஹசி (7), காமிரான் ஒயிட் (8) உள்ளிட்ட “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். பின் பிராட் ஹாடின், ஸ்டீவன் ஸ்மித் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது ஸ்மித் (34) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஹாடின் (35) நம்பிக்கை அளித்தார். ஹாஸ்டிங்ஸ் (15) ஓரளவு கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது.
தில்ஷன் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஜெயவர்தனா (24) நல்ல துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த சாண்டிமல் (2) ஏமாற்றினார். பின் தில்ஷன், கேப்டன் சங்ககரா ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, 3வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது தில்ஷன் (41) அவுட்டானார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய சங்ககரா (44*), பெரேரா (17*) ஜோடி அணியை வெற்றிக்கு no prescription online pharmacy அழைத்து சென்றது. இலங்கை அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Add Comment