பாக்., வீரர்கள் “அப்பீல்’ தள்ளுபடி

பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர் ஆகியோரது “அப்பீலை’ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தள்ளுபடி Buy cheap Viagra செய்தது. இவர்கள் மீதான தடை தொடரும் என அறிவித்தது.
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் “ஸ்பாட் பிக்சிங்கில்’ ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரித்த ஐ.சி.சி., ஊழல் தடுப்புக் குழு, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இவர்களுக்கு தற்காலிக தடை விதித்தது. இதை எதிர்த்து அப்பீல் செய்தனர். முகமது ஆசிப் மட்டும் வாபஸ் பெற்றார். மற்ற இருவர் மீதான அப்பீலை, கடந்த இரண்டு நாட்களாக விசாரித்த ஐ.சி.சி., இவர்கள் மீதான தடையை நீக்க மறுத்தது. இதுகுறித்து ஐ.சி.சி., நடத்தை விதிகள் சங்கத் தலைவர் பெலாப் வெளியிட்ட அறிக்கை:
சல்மான் பட், முகமது ஆமிர் இருவரும் தங்கள் மீதான புகாரை மறுத்தனர். இருந்தாலும் இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின், அப்பீலை தள்ளுபடி செய்வது என முடிவெடுத்தேன். தவிர, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்டுள்ள தடையும் நீடிக்கும். அடுத்து இவர்கள் நடத்தை விதிமீறல் குறித்த விசாரணையிலும், குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். ஒருவேளை தவறு செய்தது உறுதியானால், தகுந்த தண்டணை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment