அம்பயர் மறுபரிசீலனை முறை: சேவக் ஆதரவு

“உலக கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (யு.டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறை இருந்தால் நல்லது,” என, இந்திய வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் சமீபகாலமாக யு.டி.ஆர்.எஸ்., முறைக்கு வரவேற்பு காணப்படுகிறது. இதில், அம்பயர் தவறாக அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து வீரர்கள் அப்பீல் செய்யலாம். இதனை போட்டியை நடத்தும் நாடு, விருப்பப்பட்டால் மட்டுமே அமல்படுத்த முடியும். வரும் நவ., 4ல் துவங்கும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இம்முறையை அமல்படுத்த இயலாது என, இந்திய கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சேவக் கூறியது:
யு.டி.ஆர்.எஸ்., முறையின் மிகப்பெரிய ரசிகன் நான். இதனை அடுத்து நடக்க உள்ள நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்கள் மற்றும் உலக கோப்பை தொடரில் பின்பற்றினால் நல்லது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.
கடவுள் சச்சின்:
கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது பெரிய விஷயம். அதிலும் சதத்திலும் சதம் அடிப்பது என்பது கிரிக்கெட்டின் கடவுள் சச்சினால் மட்டுமே முடியும். அவர் தான் எனக்கு ரோல் மாடல். இவருடன் இணைந்து விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டக்காரன் தான்.
பி.சி.சி.ஐ., முடிவு:
எதிர்வரும் நியூசிலாந்து தொடரில் முழு இந்திய அணி பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன். இது பற்றி அணி நிர்வாகம் மற்றும் பி.சி.சி.ஐ., தான் முடிவுசெய்ய வேண்டும். வழக்கமான எனது “ஸ்டைலில்’ விளையாட பயிற்சியாளர் Buy Amoxil கிறிஸ்டன் அனுமதிப்பார். இதை மாற்ற எப்போதும் அவர் முயற்சித்ததில்லை. வலைப்பயிற்சியின் போது அதிகநேரம் பயிற்சி தருவார். அவரே பல ஆயிரக்கணக்கான முறை பவுலிங் செய்துள்ளார். 20 அல்லது 30 ரன்களில் அவுட்டானாலும், உற்சாகப்படுத்துவார். இந்திய அணியின் மற்றவர்களுடன் சேர்ந்து, கிறிஸ்டனும் முக்கியமான உறுப்பினர்.
கவனம் தேவை:
நியூசிலாந்து அணியினர் வங்கதேசத்துடன் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளனர். இதற்காக இவர்களை எளிதாக எடைபோட்டுவிடக் கூடாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை வென்றோம். உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில், இந்த வெற்றி நடையை தொடர வேண்டியது முக்கியம்.
இவ்வாறு சேவக் தெரிவித்தார்.
பயம் இல்லை
வீரர்களை கண்காணிக்க, ஐ.சி.சி., ரகசிய ஏஜன்ட்டுகளை அனுப்ப இருப்பது குறித்து சேவக் கூறுகையில்,”” நான் சுத்தமானவன். என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எனது வேலை என்ன, இலக்கு என்ன என்பது குறித்து தெரியும். ரகசிய ஏஜன்ட் பற்றி பயமில்லை,” என்றார்.
ரூ. 100 கோடி ஒப்பந்தம்
சேவக்கின் செல்வாக்கு அதிகரிக்கிறது. ரூ. 100 கோடிக்கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு சொந்தமான நிறுவனம், சேவக்கை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன், முதல் மூன்று ஆண்டுகால மதிப்பு ரூ. 100 கோடிக்கும் அதிகம். இதுகுறித்து சேவக் கூறுகையில், “”எனது சிறுவயது “ஹீரோ’ கவாஸ்கருடன் இணைந்து செயல்பட இருப்பது பெருமிதமாக உள்ளது,” என்றார்.

Add Comment