வண்ணமயமான விருது வழங்கும் விழா!:பாலிவுட், கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஆட்டம்:இரட்டை விருது வென்றார் சச்சின்

மும்பையில் “சகாரா’ விருது வழங்கும் விழா வண்ணமயமாக நடந்தது. பாலிவுட் நடிகை கரீனா கபூர், சோனாக்ஷி சின்காவின் கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களை கிறங்கடித்தது. இவர்களுடன், இந்தி “சூப்பர் ஸ்டார்’ ஷாருக் கான் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் கைகோர்த்துக் கொள்ள, இரவெல்லாம் ஆடல், பாடலுடன் நிகழ்ச்சிகள் களை கட்டின. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த நட்சத்திரம் உட்பட இரண்டு விருதுகளை சச்சின் தட்டிச் சென்றார்.
இந்திய விளையாட்டு அரங்கில், சிறந்த விளங்குபவர்களுக்கு சகாரா நிறுவனம் ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவிக்கிறது. இரண்டாவது சகாரா விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில், பாலிவுட் நடிகர் ஷாருக் கானிடம் விளையாட்டு வீரர்கள் சிக்கி தவித்தனர். இவர் நடித்த “சக்தே இந்தியா’ படத்தின் வசனங்களை நகைச்சுவையாக பேசும்படி ஹாக்கி வீரர்கள் ராஜ்பால் சிங், சந்தீப் சிங்கை கேட்டுக் கொண்டார். குத்துச்சண்டை வீரர் விஜேந்தருடன் அளவளாவி மகிழ்ந்தார். பின், இரண்டு குழந்தைக்கு தாயான நிலையிலும் குத்துச்சண்டையில் சாதிக்கும் மேரி கோமை பாராட்டினார். அவரை பார்த்து,””தொடர்ந்து ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வெல்வது சாதாரண காரியமல்ல. “ஐ லவ் யு’ என்று,”, ஷாருக் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது.
சானியா புதுமை:
தனது கணவர் சோயப் மாலிக்குடன் பங்கேற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தொகுப்பாளினியாக புதிய அவதாரம் எடுத்தார். இவர் சிறிது நேரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது “பிரேக் டான்சை’ மீண்டும் அரங்கேற்றினார். இம்முறை பாட்மின்டன் நட்சத்திரங்கள் ஜுவாலா கட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பாவுடன் சேர்ந்து ஆடினார்.
கரீனா கலக்கல்:
இந்நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர், பிராச்சி தேசாய், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனாக்ஷி சின்கா போன்றவர்கள் பிரபல இந்தி பாடல்களுக்கு, கவர்ச்சியாக நடனம் ஆடினர்.
சச்சின் மகிழ்ச்சி:
இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் போற்றுதலுக்குரிய சிறந்த நட்சத்திரம் மற்றும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளை கைப்பற்றினார். அப்போது சச்சின் கூறுகையில்,””கவாஸ்கரின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்தேன். எனக்கு ஊக்க சக்தியாக இருக்கிறார். எனது 14 வயதில் வெங்கசர்க்கார் “பேட்’ ஒன்றை பரிசாக அளித்தார். இவற்றை எல்லாம் மறக்க முடியாது. தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறேன்,”என்றார்.
காமன்வெல்த் போட்டியின் மிகச் சிறந்த வீரருக்கான விருதை வென்ற துப்பாக்கி சுடுதல் நாயகன் ககன் நரங் கூறுகையில்,””இந்திய விளையாட்டு வீரர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு காமன்வெல்த் போட்டி சிறந்த முன்னோட்டமாக அமைந்தது,”என்றார்.
சுஷில் குமார் கவுரவம்:
ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை மல்யுத்த சாம்பியன் சுஷில் குமார் வென்றார். டேவிஸ் கோப்பை வென்ற டென்னிஸ் அணி, சிறந்த இந்திய அணியாக தேர்வானது. காமன்வெல்த் போட்டியின் சிறந்த வீராங்கனை Buy cheap Doxycycline விருதை தீபிகா குமாரி(வில்வித்தை) கைப்பற்றினார். சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை மிதாலி ராஜ் பெற்றார்.
“மீனவர்’ கவாஸ்கர்
விருது வழங்கும் நிகழ்ச்சியில் கவாஸ்கரின் “மீனவ ரகசியம்’ குறித்து ஷாருக் கான் கேட்டார். இதற்கு, கவாஸ்கர் கூறுகையில்,””எனது மாமா சுதாரிக்கவில்லை என்றால், நான் கிரிக்கெட் வீரனாக ஆகியிருக்க மாட்டேன். கடந்த 1949, ஜூலை 10ம் தேதி பிறந்தேன். அப்போது, எனது இடது காதின் கீழப்புறத்தில் சிறிய குழி இருப்பதை மாமா பார்த்துள்ளார். அடுத்த நாள் அவர் வந்து பார்த்த போது, எனது தாய்க்கு அருகில் இருந்த குழந்தையிடம் அந்த குழி இல்லையாம். சந்தேகம் அடைந்த அவர் பிரச்னை கிளப்ப, ஆஸ்பத்திரி முழுவதும் தேடியுள்ளனர். இறுதியில் மீனவப்பெண் ஒருவர் அருகில் நான் அமைதியாக தூங்கிக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். குளிக்க வைக்கும் போது, குழந்தைகளை மாற்றிய விபரம் பின்னர் தெரிய வந்ததாம்,”என்றார்.

Add Comment