கடையநல்லூரில் மணல் கடத்திய 16 மாட்டு வண்டிகள் பறிமுதல்

கடையநல்லூரில் மணல் கடத்திய 16 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பெரியாற்று படுகை, சொக்கம்பட்டி, காசிதர்மம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான அளவில் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து செல்லப்படுவதாகவும், Buy Viagra Online No Prescription இதனால் விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதிக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் ஜெயராமனிடம் விவசாயிகள் இதுதொடர்பாக முறையிட்டனர். மேலும் பெரியாற்று படுகையில் நீர்பிடிப்பு குறைவாவதற்கு காரணம் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து செல்லப்படுவதுதான் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வருவாய்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி தென்காசி ஆர்டிஓ சேதுராமன் ஆலோசனையின்படி தாசில்தார் விஜயா, மண்டல துணை தாசில்தார் சுமங்கலி, வருவாய் ஆய்வாளர் ஆதிநாராயணன் மற்றும் வருவாய் துறையினர் கடந்த இரண்டு தினங்களாக தீவிர சோதனை மேற்கொண்டனர். அதனடிப்படையில் சொக்கம்பட்டி, கடையநல்லூர் பெரியாற்று படுகை, காசிதர்மம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மணல் அள்ளி வந்த 16 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள் அனைத்தும் கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் ஆதிநாராயணன் கூறுகையில், “”கடையநல்லூர் பகுதிகளில் குடிநீர் ஆதாரம் தரக்கூடிய இடங்களில் எல்லாம் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து செல்வதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்ததை அடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து செல்லப்பட்டால் அதற்கான நடவடிக்கை தொடரும்” என்றார்.

Add Comment