துபாய்:சரக்கு விமானங்களில் வெடிமருந்துகள்

ஏமனிலிருந்து துபாய் வந்த பெடரல் எக்ஸ்பிரஸ் சரக்கு விமானத்தில் வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த பிரிண்டரில் இந்த வெடிமருந்துகள் இருந்தன. இதனைக் கண்டுபிடித்த துபை காவல்துறை இந்த சதித்திட்டத்தில் தீவிரவாத இயக்கங்களின் சம்பந்தம் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த சரக்கு விமானம் ஏமனிலிருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்ல இருந்தது. துரிதமாக செயல்பட்டு இதனைக் கண்டுபிடித்ததால் மிகப் பெரிய அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இதே போல் இங்கிலாந்துக்கு வந்த யுபிஎஸ் விமானத்திலும் இவ்வாறான வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விமானங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரண்டு விமானத்தில் வெடிமருந்துகள் இருந்த பொதிகளும் சிகாகோவில் உள்ள Buy Viagra Online No Prescription ஒரு யூதக் கோவிலின் முகவரி இருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். இதனால் யூத பயங்கரவாதிகளுக்கும் இந்தச் சதித்திட்டத்தில் சம்பந்தம் இருக்குமா என்பது தெரியவில்லை. இந்தச் சதி திட்டத்தைக்கண்டறிவதற்கு ஏமன் அரசாங்கம் பெருமளவு உதவி செய்ததாக ஒபாமா குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவங்களுக்கு பிறகு ஏமனிலிருந்து தனது சரக்கு விமான சேவையை யுபிஎஸ் விமான நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

Add Comment