தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, குவைத்.2012-2013 புதிய நிர்வாகிகள் பதவி பிரமாணம்

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, குவைத்.
TMCA செயற்குழு கூட்டம், 2012-2013 புதிய நிர்வாகிகள் பதவி பிரமாணம்
மற்றும் தாயக விருந்தினர்களுக்கு உபசரிப்பு நிகழ்வு

கடந்த 31.12.2011, சனிக்கிழமை அன்று இரவு 8 மணியளவில் குவைத் சிட்டியில் உள்ள மன்னு ஸல்வா உணவகத்தில் TMCA செயற்குழு கூட்டம், 2012-2013 புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் தாயக சிறப்பு விருந்தினர்களுக்கு உபசரிப்பு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பேரவையின் மார்க்க ஆலோசகர் ஹாஜி. நாசர் ரப்பானி அவர்கள் கிராஅத் (திருமறை வசனம்) ஓதி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். பேரவையின் துணைத்தலைவர் ஜனாப்.ஹிதாயத்துல்லா அவர்கள் நபிமொழி (ஹதீஸ்) விளக்க உரை நிகழ்த்தினார். இதை தொடர்ந்து, பேரவையின் பொதுச் செயலாளர் திருமங்கலக்குடி A. அப்துல் ரஹீம் அவர்கள் செயற்குழுவுக்கு வந்திருந்த சமுதாய தலைவர்களையும், நிர்வாகிகளையும், அனைவரையும் வரவேற்று பேசினார்.

பேரவையின் தலைவர் ஜனாப். ஆவூர் A. பஷீர் அஹமது அவர்கள் தனது துவக்கவுரையில் தாயகத்திலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்களிடம் இன்றைய இந்திய அரசாங்கத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தாயக நிலையை சரியாக சுட்டிக்காட்டி சிறப்பு விருந்தினர்களின் கவனத்தை கவர்ந்தார். தொடர்ந்து, பேரவையின் 2010-2011 ஆண்டிற்கான வரவு – செலவினங்கள் கணக்கு விபரங்களை பேரவையின் பொருளாளர் சுவாமிமலை H. ஜாஹிர் ஹூசைன் அவர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் அவர் சார்பாக பேரவையின் செய்தி தொடர்பாளர் காரைக்கால் S.M. ஆரிப் மரைக்காயர் அவர்கள் கணக்கினை தாக்கல் செய்தார்கள்.

பேரவையின் 2012-2013 ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகளை (EC Members) இச்செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு செய்வதன் பொருட்டாக, முறையே பேரவையின் காப்பாளர்களில் ஒருவரான R. முஹம்மது பாரூக் அவர்கள் சகோதரர் ஆவூர்; A. பஷீர் அஹமது அவர்களுக்கு தலைவருக்கான பதவி பிரமாணமும், ஜனாப். அல்மாஸ் முஸ்தபா அவர்கள் சகோதரர் ஜனாப்.அலா என்கிற TVS அலாவுதீன் அவர்களுக்கு துணைத் தலைவருக்கான பதவி பிரமாணமும், பேரவையின் ஸ்தாபகர் ஜனாப்.ஜஹரா இக்பால் அவர்கள் சகோதரர் திருமங்கலக்குடி ஜனாப். A. அப்துல் ரஹீம் அவர்களுக்கு பொதுச் செயலாளர் பதவிக்கான பதவி பிரமாணமும், சகோதரர் ஜனாப்.ரஃபி அஹமது அவர்கள் சகோதரர் ஜனாப். ஹசன் முஹம்மது அவர்களுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கான பதவி பிரமாணமும், சகோதரர் ஹிதாயத்துல்லா அவர்கள் சகோதரர் கல்ஃப் ஏசியன் ஷாகுல் ஹமீது அவர்களுக்கு பொருளாளர் பதவிக்கான பதவி பிரமாணமும் செய்து வைத்தனர்.

மேலும், வுஆஊயு 15-ஆம் ஆண்டு சிறப்பிதழை தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகைப் புரிந்திருந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஜனாப். விட்டுக்கட்டி மஸ்தான் அவர்களும், Buy Cialis Online No Prescription நாடாளுமன்ற உறுப்பினர் T.K.S. இளங்கோவன் M.P. அவர்களுக்கு ஜனாப்.செ.ஜியாவுதீன் அவர்களும் மற்றும் சகோதரி சங்கரி நாராயணன் Ex-MLA அவர்களுக்கு TVS ரஷீது கான் அவர்களும், பேரவையின் சிறப்புகள் அடங்கிய இதழை வழங்கினார்கள்.

தொடர்ந்து, தாயக விருந்தினர்களை ளெரவிக்கும் விதமாக, ஜனாப் R.M. முஹம்மது பாரூக் அவர்கள் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும், ஜனாப்.னு.D.M. ஜபருல்லாஹ் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வு.மு.ளு இளங்கோவன் ஆ.P. அவர்களுக்கும், குவைத் தமிழ் ஆசிரியர் ஜனாப்.அப்துல் கனி அவர்கள் சகோதரி சங்கரி நாராயணன் Ex-MLA அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

குவைத் மக்களின் சார்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனுக்காக கோரிக்கை மனுவினை இந்திய அரசாங்கம் பார்வைக்கு சமர்ப்பிக்கும் விதமாக, அதனை பொதுச் செயலாளர் திருமங்கலக்குடி யு. அப்துல் ரஹீம் அவர்கள் வாசித்த பிறகு புதிய நிர்வாகிகளும், காப்பாளர்களும் அந்த மனுவினை நாடாளுமன்ற உறுப்பினர் T.K.S. இளங்கோவன் M.P. அவர்களிடம் சமர்ர்பித்தார்கள்.

தாயக விருந்தினர்களின் தொடர் கருத்துரைகளும், வாழ்த்துரைகளும் நடந்திட, நன்றியுரையை வுஏளு அலாவுதீன் அவர்கள் வாசித்திட, ஜனாப் A. அப்துல் ரஜாக் அல்வானி அவர்களின் மஜ்லீஸ் துஆ-வுடன் (இறை பிரார்த்தனை) கூட்டம் இனிதே முடிவு பெற்றது. இந்நிகழ்ச்சியினை தனக்கே உரித்தான எழில் கொஞ்சும் தமிழில் சிறப்பாக தொகுத்து வழங்கி பேரவையின் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்து உதவினார் சகோதரர் கம்பளி A. பஷீர் அவர்கள்.

தகவல்:முதுவை ஹிதாயத்

Add Comment