ஐ.பி.எல். நீக்கத்தை எதிர்த்து பஞ்சாப் அணி வழக்கு: பிரித்தி ஜிந்தா

ஐ.பி.எல். போட்டியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகமும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான இந்தி நடிகை பிரித்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் நீக்கம் செய்யப்பட்டன. ஒப்பந்த விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் உரிமையாளர்களை மாற்றியதால் இந்த அணிகளின் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 10 ஆம் தேதி அறிவித்தது.

இந்த நீக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை தீபாவளி விடுமுறைக்கு பின்னர் நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகமும், நீக்கத்தை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான இந்தி நடிகை பிரித்தி ஜிந்தா தனியார் அளித்துள்ள பேட்டியில், ” எங்கள் அணி நீக்கப்பட்டது நியாயமற்ற நடவடிக்கையாகும். இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்” Buy Doxycycline என்றார்.

Add Comment