மனித உரிமை அமைப்பின் இணையதளத்தை ஹேக் செய்த சமூக விரோதிகள்

உலகில் இன அழிவு அச்சுறுத்தலை சந்திக்கும் ஆதிவாசிகளுக்காக லண்டனை தலைமையமாக கொண்டு செயல்படும் சர்வைவல் இண்டர்நேசனல் என்ற மனித உரிமை அமைப்பின் இணையதளத்தை யாரோ சில சமூக விரோதிகள் ஹேக் செய்து சீர்குலைத்துள்ளனர்.

இந்தோனேசிய Buy Ampicillin ராணுவத்தின் பாப்புவன் என்ற ஆதிவாசி மக்களை கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சிகளை வெளியிட்டதைத் தொடர்ந்துதான் இணையத்தளத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது.

போட்சுவானாவில் கலஹரி புஷ்மென் என்ற ஆதிவாசிகளை அச்சுறுத்தி அரசு வாசஸ்தலங்களை உருவாக்கி வருகிறது. போட்சுவானாவிற்கு செல்வதை புறக்கணிக்கவேண்டும் என சர்வைவல் இண்டர்நேசனல் ஏற்கனவே சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நடவடிக்கையில் கோபமுற்ற இந்தோனேசியா போட்சுவானா அதிகாரிகள் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியில் செயல்பட்டிருக்கலாம் என அவ்வமைப்பு கருதுகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டரிகளிலிருந்து இணையதளத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது. முன்னர் போட்சுவானாவில் ஆதிவாசிகளை அவர்களின் சொந்தமண்ணிலிருந்து வெளியேற்றிய பொழுது இவ்வமைப்பு எதிர்ப்பு தெரிவித்த வேளையிலும் இத்தகையதொரு தாக்குதலை இணையதளம் எதிர்கொண்டது.

சித்திரவதைச் செய்யும் காட்சிகளை வெளியிட்ட ஏசியன் மனித உரிமை கமிஷன் மற்றும் பாப்புவன் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகளின் இணையதளங்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

ஹேக்கிங் சைபர் தீவிரவாதம் என சர்வைவல் இயக்குநர் ஸ்டீஃபன் கோரி கூறியுள்ளார். ஆதிவாசிகளுக்கெதிராக நடக்கும் அக்கிரமங்களுடன் ஒப்பிடுகையில் இணையதளத்தின் மீதான தாக்குதல் சிறிது அளவுதான் என ஸ்டீஃபன் கோரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக போராடும் தோம்க்ரியா கோண்ட் ஆதிவாசிகளின் பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டுவந்ததும் சர்வைவல் இண்டர்நேசனல் அமைப்பின் முயற்சியே காரணமாகும்.

Add Comment