ஆவி, பேய், மறுஜென்மம் நம்பிக்கையால் விபரீதம்

வாய்க்காலில் புத்தாடை, மாலையுடன் மிதக்கும் ஆண், பெண் சடலங்கள் மறுஜென்மம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், இறந்தவர்களது சடலங்களை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு செல்லும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பாசன ஆதாரம் பவானிசாகர் அணை. இங்கிருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்கால் 200 கி.மீ நீளம் கொண்டது. வாய்க்காலில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50&க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்துள்ளன. பெரும்பாலும் கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்தவர்கள் உடல்கள்தான் வாய்க்கால்களில் மிதப்பது வழக்கம். கீழ்பவானியிலோ, புத்தாடை உடுத்தப்பட்ட சடலங்கள் அதிகளவில் மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்களுக்கு புத்தாடை மாட்டி யார் இங்கு தள்ளிவிடுவது என்று விசாரித்ததில் கிடைத்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் வசிக்கும் ஒரு தரப்பு மக்களிடையே வினோத, விபரீத நம்பிக்கை ஒன்று உள்ளது. இறந்தவரது உடலை குளிப்பாட்டி, சடங்குகள் செய்து புத்தாடை அணிவித்து, வாய்க்காலில் வீசி மீனுக்கு உணவாக போட்டால் மறுஜென்மம் நல்லதாக இருக்கும் என்பது இவர்கள் நம்புகிறார்கள். இறந்தவர்களது உடல்களை இவர்கள் புதைப்பதோ, எரிப்பதோ இல்லை. அலங்கரித்து, பாடையில் தூக்கிவந்து, வாய்க்காலில் வீசிவிடுகின்றனர். இவ்வாறு செய்தால், அந்த ஆத்மாக்கள் பேயாக அலையாது என்றும் நம்புகிறார்கள்.

வாய்க்கால்களில் ஆண், பெண் சடலங்கள் மாலையுடன் மிதப்பது அதிர்ச்சியாகவும் பீதி ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. குறிப்பாக புங்கம்பாடி பகுதியில்தான் இவை அதிகம் கரை ஒதுங்குகின்றன.

இதுபற்றி போலீசார் கூறுகையில், “தகவலே இல்லாமல் பல உடல்கள் வாய்க்காலோடு போய்விடுகின்றன. எங்களுக்கு தகவல் வந்தால் உடனே சென்று மீட்கிறோம். சில நாட்களுக்கு முன்பு, கொலை செய்யப்பட்ட உடலை மீட்கச் சென்றபோது, அடையாளம் தெரியாத 4 பிணங்கள் கிடந்தன. யார் அவற்றை வீசினர் என்றுகூட கண்டுபிடிக்க முடியவில்லை” என்றனர். இதுதொடர்பாக விசாரித்து வருவதாக ஈரோடு எஸ்.பி. ஜெயச்சந்திரன் கூறினார்.
மூடர்களின் முட்ட வைத்தியம்

http://4.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S5YID5ZEnRI/AAAAAAAAB8I/u3h-EAIT9OE/s400/960x.jpg

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு (ஆ)சாமி நின்று கொண்டிருக்கிறான். இந்த கொடுமை நடந்தது கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் (Katihar) என்ற ஊரில். அந்த கதிஹார் ஊரில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கின்றபோதும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் நவீன மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்குப்பதிலாக அந்த ஊரில் உள்ள (ஆ)சாமியிடம் தான் காட்டுவார்களாம்.

அந்த (ஆ)சாமியின் பெயர் பாபா ஜாமூன் யாதேவ் (Baba Jamun Yadav ). இவன் தன்னிடம் உள்ள அபார சக்தி மூலம் malaria விலிருந்து malnutrition வரை எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று அங்குள்ள அப்பாவி மக்களை கடந்த 20 வருடகாலங்களாக ஏமாற்றி வந்துள்ளான்.

http://4.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S5YIMn4V_MI/AAAAAAAAB8Q/XWwAm2GfV9Y/s400/CEN_GodStepper_380_952643a.jpg

இவன் செய்யும் வைத்தியம் என்னவென்றால் சுகயீனமான குழந்தைகளை நிலத்தில் கீழே போட்டு தனது உடம்பின் முழுப்பலத்துடன் அந்த குழந்தைகளின் உடம்பின் மீது ஏறி நின்றுகொண்டு ‘Jai Ho’ என்று பெரிதாக சத்தமிட்டு அந்த குழந்தைகளை மிதிப்பதுதான். அவன் மிதிக்கும் இடங்கள் குழந்தைகளின் கழுத்து மற்றும் புறப்பாலுறுப்புகள் (genitals) மீது. அப்பாவி கிராம மக்களும் அந்த (ஆ)சாமிக்குள் இருக்கும் சக்தி அவன் கால்கள் வாயிலாக வெளிப்பட்டு தங்களின் குழந்தைகளின் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று நம்பி இப்படியான ஒரு காட்டுமிராண்டி பிரார்த்தனைக்கு அனுமதித்து தங்களின் குழந்தைகளை அவனிடம் காட்டி வந்துள்ளார்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தால் இதுவரையில் எவ்வளவு குழந்தைகள் பலியானார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை Headlines Today எனும் இந்திய தொலைக்காட்சி படம்பிடித்து ஒளிபரப்பி ஒரு நேரடி நிகழ்ச்சியொன்றும் ஸனல் எடமாருக்கு (Sanal Edamaruku ) என்பவரால் நடத்தப்பட்டு இப்படியான முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்தப்படவேண்டும், அந்த (ஆ)சாமியை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், அதிகாரிகள் சமயத்தின் பெயரில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தினார்.

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பீகார் மாநில சுகாதார அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த (ஆ)சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (Nikhil Chaudhary from the Hindu nationalist BJP) என்பவர் ”இந்தமாதிரியான சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களேயானால், இப்படியான சடங்குகளை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்” . இது ஒரு கண்ணியமான உள்ளூர் ஐதிக முறை என்று இந்த காட்டுமிராண்டி தனத்தை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அந்த பாராளுமன்ற உறுப்பினர் நியாப்படுத்தி உள்ளார்.

மற்றும் ஸனல் எடமருக்கு அவர்கள் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியிடம் உங்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுபோது, சங்கராச்சாரியும் அந்த காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

(இந்த சங்கராச்சாரியையும் இந்த குழந்தையைப்போல் கீழே போட்டு ஏறி நாலு மிதிமிதித்தால் Buy cheap Cialis அப்ப தெரியும் சங்கராச்சாரிக்கு இந்த கள்ளச்சாமிகளின் மருத்துவம் எப்படிப்பட்டதென்று)

இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி (ஆ)சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

எனிமேல் இந்த ஆசாமி வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

Add Comment