மேலப்பாளையம் MMCC WINNER OF RAMADAN CUP ABUDHABI- 2010!

அபுதாபியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற RAMADAN CUP-2010 இறுதிப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேலப்பாளையம் MMCC அணியினர் இறுதிப் போட்டியில் ETA-Melco அணியை மிக எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றினர்.

அந்த அணியின் காஜா (கேப்டன்), பாசில், ஞானியார் மற்றும் அருண்குமார் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.

கடந்த ஒருமாத காலமாக நடைபெற்ற இந்த தொடரில் மேலப்பாளையம் MMCC, ETA- Melco, Emco மற்றும் Prime Tech ஆகிய அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மேலப்பாளையம் MMCC மற்றும் ETA- Melco, இரு அணிகளும் கடந்த 29-10-2010 வெள்ளிக்கிழைமையன்று மோதின.

டாசில் வெற்றிபெற்ற மேலப்பாளையம் MMCC அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவரில் 104 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பாக ஞானியார் 27 ரன்களும் அருண்குமார் 18 ரன்களும் எடுத்தனர். ETA- Melco அணியின் பந்துவீச்சாளர்கள் ரிபாய் 3 விக்கட்களும், ஜலீல் 2 விக்கட்களும் கைப்பற்றினர்.

105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கில் களமிறங்கிய ETA- Melco அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவரில் அனைத்து விக்கட்களையும் இழந்து வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பாக ரிபாய் 20 ரன்களும் ஷேக் 15 ரன்களும் எடுத்தனர். மேலப்பாளையம் MMCC அணியின் பந்துவீச்சாளர்கள் காஜா (கேப்டன்) 2 விக்கட்களும், பாசில் 2 விக்கட்களும் கைப்பற்றினர்.

இதன்மூலம் மேலப்பாளையம் MMCC அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மிக எளிதாக ETA- Melco அணியை தோற்கடித்து RAMADAN CUP- 2010 கோப்பையை கைப்பற்றியது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனாப் செய்யத் ஹமீத் அவர்கள், General Manager, ETA-Melco மற்றும் ஜனாப் இம்தியாஸ் அஹமத் அவர்கள், Manager, ETA-Melco ஆகிய இருவரும் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டு பரிசுகளை அளித்தனர். பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்க்காக நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

MATCH DETAILS

MMCC SCORE :104/10 (16 OVER)

MMCC BATS MAN

1) T.GNANIYAR : 27 RUNS (25 BALLS)

2) ARUN KUMAR :18RUNS (18 BALLS)

MELCO BOWLERS

1)RIFAY 4 OVER- 9 RUNS -3WKTS

2)JALEEL 3 OVER- 15RUNS-2WKTS

MELCO SCORE : 84/10 (OVER 15.3)

MELCO BATS MAN

1)RIFAY : 20 RUNS (17 BALLS)

2)SHEIK(C):15 RUNS (21 BALLS)

MMCC BOWLERS

1)FAZIL KHAN 3 OVER – 6 RUNS – 2 WKTS

2)P.S.KAJA MOHIDEEN(C) 2 OVER – 17 RUNS 2 WKTS
MMCC WON BY 20 RUNS

BEST BATS MAN
T.GNANIYAR,MMCC TEAM ABU DHABI
TOTAL MATCH SCORE: 22+18+1+27= 68RUNS

BEST BOWLER
P.S.KAJA MOHIDEEN(C) MMCC TEAM ABU DHABI
TOTAL MATCH WKTS: 2+3+1+2=8 WKTS
MMCC WINNER OF RAMADAN CUP 20101.Ramadan Cup Abu Dhabi – 2010

   

2.Best Bowler Kaja Gift Presented by Mohamed Rizwan ETA PrimetechBuy cheap Bactrim target=”_blank”>
3.Best Bowler Kaja Gift Presented by Syed Hameed, GM. ETA-Melco4.Best Batsman Gift Presented by Syed Hameed, GM (ETA-Melco) to Gnaniyar5.Gift Presented by Syed Hameed, GM, & Imtiaz Ahamed Manager to Gnaniyar6.Melapalayam MMCC Team with Syed Hameed, GM and Imtiaz Ahamed, Manager
7.Melapalayam MMCC Team with Syed Hameed, GM

 

8.Gift Presented by Syed Hameed, GM and Imtiaz Ahamed, Manager to Sheik Melco9.Gift Presented by Syed Hameed, GM and Imtiaz Ahamed, Manager to Melco Team10.Winner Cup Presented by Syed Hameed, GM and Imtiaz Ahamed, to Kaja MMCC
11.Gift Presented by Syed Hameed, GM and Imtiaz Ahamed, Manager to MMCC Team12.Winner Cup with Kaja, Imtiaz Ahamed, Syed Hameed and Ansari

Add Comment