டாட்டா மீண்டும் சிங்கூரில்?

மேற்குவங்காள மாநிலம் சிங்கூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானோ கார் தயாரிப்பு திட்டத்தை buy Levitra online கைவிட்டுச் சென்ற டாட்டா நிறுவனம் மீண்டும் சிங்கூருக்கு திரும்பும் முயற்சியில் உள்ளது.

சிங்கூருக்கு டாட்டாவின் வருகைக்கு அம்மாநிலத்தை ஆளும் இடதுசாரி அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. சிங்கூரில் டாட்டா தொழிற்சாலை துவங்குவதுத் தொடர்பாக அந்நிறுவனம் ஓரிரு நாட்களில் முடிவுச் செய்யும் என மேற்குவங்காள மாநில தொழில் அமைச்சர் நிருபம் சென் தெரிவித்துள்ளார்.

சி.பி.எம்மின் மாநில செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு நிருபம் சென் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். நிலம் தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பார்கள் என கருதுவதாக சென் தெரிவித்தார்.

டாட்டா மீண்டும் சிங்கூரில் முதலீடுச் செய்யுமா என கேள்வி எழும்பியபொழுது ’ஆம்’ என அமைச்சர் பதிலளித்தார்.

சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக மாநில அரசு கையகப்படுத்தி அளித்த நிலத்தை திரும்ப வழங்கவியலாது என டாட்டா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. வேறு ஏதேனும் திட்டத்திற்காக அந்நிலத்தை பயன்படுத்தப் போவதாக டாட்டா தெரிவித்தது.

646 ஏக்கர் நிலத்தை 90 வருட குத்தகைக்கு டாட்டா நிறுவனம் எடுத்துள்ளதாக அந்நிறுவனத்திற்காக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னர் சிங்கூரில் டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலை திட்டத்திற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் வலுவான போராட்டம் நடந்ததைத் தொடர்ந்து டாட்டா சிங்கூரிலிருந்து நானோ கார் தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது.

Add Comment