‘பேஸ்புக்’ உபயோகிக்க இடையூறு விளைவித்த குழந்தையைக் கொலைச்செய்த தாய்

‘பேஸ்புக்’கில் இணைந்திருந்த போது இடையூறு விளைவித்த குழந்தையை கொன்ற தாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

buy Bactrim online justify;”>அமெரிக்க வட புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ‘பேஸ்புக் ‘ இணையத்தளத்தினை உபயோகிக்கும் போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தையைக் கொல்ல நேரிட்டதாக, தனது குற்றத்தைத் தானே ஒப்புக் கொண்டார்.

அலெக்ஸேண்ரா டொபியஸ் எனும் இப்பெண் ‘பேஸ்புக்’கில் உள்ள ‘பார்ம்வெளி’ எனும் பிரபல கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்துள்ளார். அந்நேரத்தில் இவரது 3 மாதங்களேயான குழந்தை அழுதுள்ளது. இதன்போது கோபமடைந்த இவர் ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி வேகமாக குலுக்கவே, அதன் தலை கணினியில் மோதி குழந்தை உயிரிழந்ததாக அலெக்ஸேண்ரா தெரிவித்துள்ளார்.

இவருக்கான தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது. இவருக்கு சுமார் 25 முதல் 50 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment