ஆனந்த் மீண்டும் `நம்பர் 1′ இடத்தை பிடித்தார்

உலக செஸ் சாம்பியன்ஷிப் வீரர்கள் தரவரிசையில் இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச செஸ் விளையாட்டுக் கூட்டமைப்பு வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

உலக buy Ampicillin online செஸ் சாம்பியனான சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து `நம்பர் 1′ இடத்தில் உள்ளார். அவரது ரேட்டிங் புள்ளிகள் 2804 ஆகும். இது அவர் பெற்ற சிறப்பான புள்ளிகள் ஆகும்.

இது உலக செஸ் வரலாற்றில் 5-வது சிறப்பு ஆகும். இதற்கு முன்பு ஆனந்த் 2008-ம் ஆண்டில் 2803 புள்ளிகள் பெற்றதே சிறப்பானதாக இருந்தது.

சீனாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டிகளில் ஆனந்த் இரண்டாவது இடக்த்தைப் பிடித்ததையடுத்து இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.

Add Comment