ஒபாமா வருகை: பலத்த பாதுகாப்பு

ஒபாமா இந்தியாவுக்கு வருவதற்கு பலதரப்புகளிலிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருவதால் Buy Levitra Online No Prescription அவர் வருகையையொட்டி டெல்லி, மும்பை மற்றும் பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகிற 6, 7, 8, 9 ஆகிய 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக 6ந் தேதி டெல்லி வருகிறார். 7ந் தேதி மும்பை செல்கிறார். 8ந் தேதி டெல்லியில் பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். 9ந் தேதி காலை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஒபாமா இந்தோனேசியா செல்கிறார்.

ஒபாமா வருகையையொட்டி டெல்லி, மும்பையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒபாமா வருகைக்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகம்மத் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து டெல்லி, மராட்டியம், காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் நுழைந்து விடாமல் இருக்க ரோந்து பணியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். நகருக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகின்றன.

இதனிடையே ஒபாமா வருகை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் அமெரிக்க தூதர் ஆலோசனை நடத்தினார்.

Add Comment