துபாயில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வ‌ங்கியின் ஆத‌ர‌வில் ந‌டைபெற்ற‌ துபாய் மாரத்தான் 2012

துபாய் : துபாயில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வ‌ங்கியின் ஆத‌ர‌வில் ந‌டைபெற்ற‌ துபாய் மாரத்தான் 2012 ஜனவரி 27 அன்று புர்ஜ் கலிபா வளாகத்தில் ஆரம்பமாகி முக்கிய வீதிகள் வழியாக ஜுமைரா கடற்கரை சாலை வரை சென்று மீண்டும் அதே வழியாக 42.195 கி. மீ. முடிவு எல்லையை சென்றடைந்தது .

இந்த வழித்தடத்தில் 40 -வது கி. மீ. -ல் ஓட்டப்பந்தய Levitra online வீரர்களுக்கான குடி நீர் வழங்கல் மற்றும் உதவி நிலையத்தில் ஈ. டி ஏ – அஸ்கான் – ஸ்டார் குழுமத்தை சார்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அஹமது சுலைமான் தலைமையில் சேவை புரிந்தனர் .

இப்போட்டிகளில் சர்வதேச வீரர்கள் உட்பட சுமார் 20,000 பேர்கள் கலந்து கொண்டனர். இதில் எத்தியோப்பிய வீரர் அயிலே ஆப்ஷேரோ 2 மணி 4 நிமிடம் 23 வினாடிகளில் கடந்து முந்தய (2008 ) ஹெயிலே காப்ர்செலாசி -யின் சாதனையை முறியடித்தார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் எத்தியோப்பிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.இந்த போட்டியில் முதற் பரிசாக $ 250,000 வழங்கப்பட்டது.

தகவல்:முதுவை ஹிதாயத்

Add Comment