இஸ்லாமிய இலக்கியக் கழகம், கடையநல்லூர்-சிறப்புக்கூட்டம்

இஸ்லாமிய இலக்கியக் கழகம், கடையநல்லூர்
                            சிறப்புக்கூட்டம்
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் இன்று 29 -01 -2012 மாலை 04 -30 மணிக்கு  தாருஸ்ஸலாம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் ஜனாப் புலவர் கமால் முஹ்யித்தீன் M .A . M .Ed .  (புளியங்குடி) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உத்தம பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கௌதியா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ஜனாப் முனைவர் R  முஹம்மது ரபீக் M . A . , M . PhIL , P .hd      அவர்கள்   சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள் . ஏராளமான பொது மக்களும் இலக்கிய ஆர்வலர்களும் இலக்கியக் Cialis No Prescription கழகத்தின் உறுப்பினர்களும் வந்திருந்து சிறப்பித்தனர்
ஜனாப் முட்டணி ஹுசைன் அவர்கள் இஸ்லாமிய கீதமிசைத்து  வந்திருந்த அனைவரையும் பரவசப் படுத்தினார்கள்
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளர் ஜனாப் சேயன் இபுராஹீம் அவர்கள் வந்திருந்தவர்களை வரவேற்று அறிமுக உரை ஆற்றினார்கள். கூட்டத்தின் இறுதியில் ஜனாப் சேயன்
ஹமீது அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.
பேராசிரியரின் சிறப்புரை வந்திருந்த அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றது. இனிவரும் நாட்களில் இஸ்லாமிய இலக்கியம் பற்றி பல்வேறு அறிஞர் பெருமக்கள் தொடர்ந்து உரை ஆற்ற இருக்கிறார்கள் என்று செயலாளர் ஜனாப் சேயன் இபுராஹீம் கூறினார்.
கடையநல்லூரைச்  சேர்ந்த கவிஞர்கள் , இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள், கதையாசிரியர்கள் என்று
பலரையும் உலகறியச் செய்யும் இந்த அரிய முயற்சிக்கு கடையநல்லூரில் மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது.
கடையநல்லூரின் காலக் கண்ணாடியாகவும் செய்திகளைச் சேகரித்து உடனுக்குடன் வழங்கிப் பாராட்டுப் பெற்றுவரும் kadayanallur.org இணைய தளம் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினரோடு இணைந்து கடையநல்லூர் இலக்கிய படைப்பாளிகளை உலகறியச் செய்யும் உன்னதமான பணியில்
உறுதுணையாக நிற்கும். (இன்ஷா அல்லாஹ்)

%%wppa%%

%%slide=83%%

தகவல்:முஸ்தபா கமால்

Add Comment