கிரெடிட் கார்டு ரகசிய எண்ணை திருடி நடந்த மோசடியில் வங்கி மானேஜர் கைது

கிரெடிட் கார்டு ரகசிய எண்ணை திருடி நடந்த மோசடியில் வங்கி மானேஜர் கைது கிரெடிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை திருடி, அதை பயன்படுத்தி ஆன்-லைன் மூலம் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து சென்னையில் நடந்த ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் வங்கி மானேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தொழில் அதிபர் சென்னை பெரியமேட்டை சேர்ந்த தொழில் அதிபர் முகமது சாஜித் என்பவர் பெயரில் உள்ள வங்கி கிரெடிட் கார்டை அவருக்கே தெரியாமல் தவறாக பயன்படுத்தி ஆன்-லைன் மூலம் விமான டிக்கெட் எடுத்து கொடுத்து, மோசடி கும்பல் ஒன்று ரூ.97 ஆயிரத்தை சுருட்டி விட்டது.

அந்த ரூ.97 ஆயிரத்தை கட்டும்படி குறிப்பிட்ட வங்கியில் இருந்து அவருக்கு தகவல் வந்தது. அதை பார்த்து முகமது சாஜித் கடும் அதிர்ச்சி அடைந்தார். விமானத்தில் பயணம் செய்யாமலேயே விமான டிக்கெட் எடுத்ததாக பணம் கட்டச்சொல்லி வங்கியில் இருந்து தகவல் வந்ததை பார்த்து முகமது சாஜித் கொதித்து எழுந்தார். சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து இந்த நூதன மோசடி குறித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகரன் ஆகியோர் மேற்பார்வையில், சைபர்கிரைம் உதவி கமிஷனர் தங்கராஜ் தலைமையிலான சிறப்பு படை போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர்.

3 பேர் கைது விசாரணையின் முடிவில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த சையது முனாவர் (வயது 28), முஜாயித் (19), அப்சல் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சையது முனாவர் பி.சி.ஏ. online pharmacy without prescription பட்டதாரி ஆவார். முஜாயித் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர்கள் மற்றவர்களின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் விமான டிக்கெட் எடுப்பார்கள். பின்னர் குறிப்பிட்ட பயணிகளிடமிருந்து பணத்தை வாங்கிக்கொள்வார்கள். டிராவல்ஸ் நிறுவனங்களும் இவர்களுக்கு கணிசமான கமிஷன் தொகையை கொடுக்கும்.

இதுபோல, இவர்கள் கடந்த 5 மாதங்கள் 120 பேர்களிடம் அவர்களுக்கு தெரியாமலேயே ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வங்கி மானேஜர் கைது இவர்களுடைய மோசடி லீலைகளுக்கு சில வங்கி அதிகாரிகளும் துணை போயிருக்கலாம் என்று கருதப்பட்டது. இது பற்றி தீவிர விசாரணை நடத்திய போது இதற்கு உடந்தையாக இருந்த சென்னை ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி கிளை ஒன்றின் சேல்ஸ் மானேஜர் நல்லீஸ்வரன் என்பவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Add Comment