வருவாயா மேம்பாலமே… ஏக்கத்திலிருக்கிறார்கள் தென்காசி வாசிகள்….

நெல்லை மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் இயக்கப்படுவது பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் அதோடு நாள் ஒன்றுக்கு மதுரை வரை 5 ஷெட்யூல்ட்களாக சாதாரண பயணிகளின் ரயிலும் இயக்கப்படுகின்றன.

இதனால் செங்கோட்டை அடுத்த தென்காசி ரயில்வே ஜங்ஷன் தொடர் ரயில் போக்குவரத்தில் இருப்பதால் ரயில்வே கேட்கள் மணிக்கு மணி அடைக்கப்படுகின்றன.

இதனால் நகருக்குள் வந்து செல்லும் buy Bactrim online பேருந்துகள் அத்யாவசிய சரக்கு வாகனங்கள் பொது மக்களின் போக்குவரத்து கூட தடைபட்டன.

இதனைக் கருத்தில் கொண்ட ரயில்வே நிர்வாகம் 32 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பணி தொடங்கியது. பணிக்கு அவசியமாக ரயில்வேகேட் மூடப்படடததால் மாற்றுப் பாதை பயன்படுத்தப்பட்டது

பாலம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக சுரங்கப் பாதை அமைக்கும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது

இதனிடையே பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு ஒருவருடம் கழிந்த பிறகும் கைவிடப்பட்ட நிலையில் போக்குவரத்து அத்யாவசியப் பொருட்கள் வரத்து குடி நீர்வீநீயோகம் போன்றவைகள் பாதிக்கப்படுவதால் தொன்காசி மற்றும் சுற்று வட்டார மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

கட்டுமானப் பணிகள் எப்போது முடிந்து, விடிவு பிறக்கும் அதோடு தென்காசி திருநெல்வேலி அகல ரயில பாதைப்பணி முடிவுபெற்று விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும் நிலையில் பாதிப்பு இன்னும் கடுமையாகும், என்கிற பொதுமக்கள் தற்காலிக ரயில்வே கேட்“ அமைத்து சமாளிக்கவேண்டுகின்றனர்.

பாலத்தின் கட்டுமானப்பணிக்கான டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படாத நிலை தொடர்கிறது என்கின்றனர் ரயில்வே வட்டார அதிகாரிகள். வருவாயா மேம்பாலமே. ஏக்கத்திலிருக்கிறார்கள் தென்காசி வாசிகள்.

தகவல்: அசன்

Add Comment