சாட்சியம் இல்லாமலே நாங்கள் குற்றவாளிகளா? – சல்மான் பட்

கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக் இடைக்கால தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், மொகமட் ஆமீர், மொகமட் ஆசிப் ஆகியோர் ‘போதிய ஆதாரம் இல்லமலேயே நாங்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளனர்.

ஐ.சி.சி. மட்டுமல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்தும் சல்மான் பட் விமர்சனம் செய்தார்.

“நான் இனிமேல் என்னுடைய வழக்கை இவ்வாறு கெஞ்சிக் கூத்தாடி முன்னிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் நாங்கள் பேசாமல் இருந்தோம் ஏனெனில் ஐ.சி.சி.யிடம் எங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே எங்கள் சார்பாக வாதாடியது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிகளுக்கும் நாங்கள் கட்டுப்பட வேண்டியுள்ளது. ஆனால் இப்போது ஐ.சி.சி. இந்த விவகாரத்தை கையாள்வதைப் பார்க்கும்போது மிகவும் ஏமாற்றமாக உள்ளது.” என்றார் சல்மான் பட்.

அவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் எங்கள் விவகாரத்தில் அசட்டையான போக்கைக் கடைபிடிக்கிறது. இதனால் நாங்கள் இப்போது எங்கள் பக்க நியாயத்தை நாங்களே பேசித் தீர்க்க விடப்பட்டுள்ளோம்.

நாங்கள் ஊழலில் ஈடுபட்டதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் ஐ.சி.சி. இது வரை எங்களிடம் காட்டவில்லை. ஆனால் எங்கள் மேல்முறையீட்டை காரணமின்றி நிராகரித்துள்ளது. அவர்கள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் எங்களை மடக்க முயற்சி செய்கின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் மடக்க முயற்சிக்கின்றனர்.

Buy cheap Viagra style=”text-align: justify;”>ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர்தான், ஆனால் எங்கள் விவகாரத்தில் ஆதாரமில்லாமல் எங்களை குற்றவாளிகள் என்று கூறிவிட்டனர், இப்போது நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது.

நாங்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்த ஆதாரங்கள் எவரிடமாவது இருக்குமானால் அவர்கள் தயவு செய்து அதனை கொண்டு வர வேண்டுகிறேன்.

ஐ.சி.சி. எங்களை விளையாட விடாமல் செய்துள்ளது. எங்களின் வாழ்வாதாரங்களை பறித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்தான் இது.

மஷர் மஜீத் ஒரு முகவர் எங்களுக்கு மட்டுமல்ல அணியின் மற்ற வீரர்களுக்கும் அவர்தான் விளம்பர வருவாய்க்கான ஏஜெண்ட். நாங்கள் அவருடன் நட்புடன் பழகினோம், ஆனால் அவர் ஏன் இந்த அபாண்டக் குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைத்தார் என்று புரியவில்லை.

தினௌம் நூறுக்கணக்கான ரசிகர்கள் எங்களிடம் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். ஆட்டோகிராப் போடுகிறோம் இதனாலெல்லாம் எங்களுக்கு அவர்கள் அனைவரையும் தெரியும் என்று கூறுவது பொருந்துமா?”

இவ்வாறு கூறினார் சல்மான் பட்.

Add Comment