கடையநல்லூர்.org செய்தி எதிரொலி 13-வது வார்டு ரேசன் கடையில் கவுன்சிலர் முபாரக்

கடையநல்லூர்.org செய்தி எதிரொலி 13-வது வார்டு ரேசன் கடையில் கவுன்சிலர் முபாரக்

சில தினங்களுக்கு முன் நமது இணையதளத்தில் “கடையநல்லூரில் அரசு அலுவலர் இல்லாமல் நடத்தப்படும் ரேசன் கடை மக்கள் அதிருப்தி” என்ற தலைப்பில் கடையநல்லூர் 13 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையில் உள்ள பிரச்சனைகள் பற்றி குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது வாசகர்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

இந்த செய்தியை அறிந்து 13- வது வார்டு முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற கவுன்சிலர் முபாரக் அவர்கள் நம்மை தொடர்பு கொண்டு ரேசன் கடையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அதற்க்கு தாம் மேற்கொண்ட முயற்ச்சிகள் பற்றி விளக்கி கூறினார்:

இது சம்பந்தமாக தாசில்தார்,உணவுத்துறை செயலாளர்,கடையநல்லூர் MLA ,மாவட்ட கலெக்டர் மற்றும் முதலமைச்சரின் செகரட்ரி உட்பட அனைவருக்கும் FAX மூலம் புகார் தெருவிக்கபட்டுள்ளதாகவும்.இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்டும் என்று தெருவிக்கபட்டதாவும் தெருவித்தார் .

அது மட்டுமின்றி உடனடியாக கவுன்சிலர் முபாரக்கே நேரில் சென்று ரேசன் கடையில் அமர்ந்து அங்குள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து, அங்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு Buy Amoxil Online No Prescription முறையாக பொருட்கள் விநியோகிக்க படுகிறதா என்பதை அந்த பகுதி மக்களிடம் விசாரித்துள்ளார். .

தம்மை கவுன்சிலராக தேர்ந்தெடுத்த 13-வது வார்டு பகுதி மக்களுக்கு தன் தகுதிக்கு உட்பட்ட சேவைகளை செய்த இவரின் நடவடிக்கை பாராட்டும் படி உள்ளன.

நமது இணையதள செய்தி மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு அதனால் மக்களுக்கு நல்லது நடந்தால் அதுவே கடையநல்லூர் மக்கள் நமக்கு கொடுத்தத அங்கீகாரம்.

தொடரும் நமது மக்கள் சேவை…உங்கள் ஆதரவோடு…

Add Comment