காதலர் தினம்…..

காதலர் தினம்…..
நெருங்கிகொண்டிருக்கிறது அந்த நாள்,14 ஆம் தேதி பிப்ரவரி..கொண்டாட்டங்களுக்கு தயாராகிவிட்டனர் காதலர்கள்..ஆம் காதலர் தினம் தான்…

கடற்கரையில் கண்டவர்களும் பார்க்க
உடலோடு உடல் உரசி,எல்லை மீறுகையில் சற்று இதழோடும் இதழ் உரசி,கேட்டால் நாங்கள் உண்மையான காதலர்கள் என்று பினாத்திக்கொள்ளும் கூட்டங்களும்…

சினிமா தியேட்டர்களில் விளக்கனைந்த பின்பு,அரை குறையாய் ஆடை ஒதுக்கி இன்னும் அதிகமாகவே
வீதிகளில் உடலறவு கொள்ளும் விலங்குகளை விட கேவலமாக அவலங்கள் அந்த நாளில் Buy Doxycycline Online No Prescription இன்னும்
அதிகமாகவே அரங்கேறும்…

காதல்…எது சம்மந்தப்பட்டது
விழியில் விழுந்து…இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவா…இல்லை
விழியில் விழுந்து..உடலோடு கலந்து
வீதியில் மானம் வீழ்ந்து கிடக்கும்
உறவா…

காதல்..பெரும்பலான மனிதர்கள் எதாவது ஒரு சூழ்நிலையில் சந்தித்துதான் இருக்கிறார்கள்…
இனக்கவர்சியால் வரும் ஹார்மோன்களின் மாற்றமே காதல்…

நீங்கள் மனம் விரும்பிய பெண்ணையே
மணமுடித்துக்கொள்ளுங்கள் – மார்க்கம் சொல்கிறது, உங்களுக்கு ஒரு பெண் பிடித்திருக்கிறது என்றால்
முறையாக மணந்துகொள்ளுங்கள்…

காதல் என்ற பெயரில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அனாச்சாரங்களும் அதனால் வாழ்வு இழந்து நிற்கும் பெண்களும் நாளுக்கு
நாள் அதிகமாகிகொண்டுதான் வருகிறது..

வாலடைன் என்ற காதலுக்கு உதவிய
ஒரு பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படும் இந்த காதலர் தினம் என்ற கலாச்சார சீரழிவு…
ஒரு பெண்பிள்ளையை பெற்ற பெற்றோர்கள்,அந்த பிள்ளையை ஒழுக்கமாக வளர்பதற்கு இந்த சமுதாயத்தில் எத்தனை போராட்டங்களை சந்திக்கவேண்டியிருக்கிறது…

ஒரு குடும்பத்தின் மானம் பெண்பிள்ளைகளால் தீர்மானிக்க படுகையில்,அந்த பெண் வெளியில் சென்று வீடு திரும்பும் வரை,வயிற்றில்
நெருப்பை கட்டி உயிரை கையில் பிடித்திருக்கும் நம் தந்தையும் தாயையும் ஏமாற்றும் ஒரு நாள் தான்
இந்த காதலர் தினம்…

திருமணத்திற்கு முன்பு காதல்..அழகிய
மலராய் வசீகரிக்கிறது,மணக்கிறது
ஆனால் வாடி விடுகிறது ஒரே நாளில்..

திருமணத்திற்கு பின்பு காதல்..மறைந்திருந்து தன் தியாகத்தை யாருக்கும் தெரியப்படுத்தாமல் மரத்தை தாங்கும்
வேர் போல ஆழமாக நம் உறவுகளை
தாங்கி நிற்கிறது…

காதலர் தினம் என்று தனியாக இல்லாமல்,மனைவியின் நினைவோடுவும்,கணவனின் நினைவோடும் வாழும் நல்லவர்களுக்கு
எல்லா நாளும் காதலர் தினமே…

Add Comment