அகமதாபாத் வந்தது இந்திய அணி

அகமதாபாதில் நவம்பர் 4ஆம் தேதி துவங்கும் இந்திய-நியூஸீலாந்து டெஸ்ட் போட்டித் தொடருக்காக இந்திய அணி இன்று காலை அகமதாபாத் வந்து சேர்ந்தனர்.

தோனி தலைமையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், Buy cheap Levitra ஜாகீர் கான், லக்ஷ்மண், பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன், சேவாக், ரெய்னா, பிராக்யன் ஓஜா ஆகியோர் இன்று காலை விமானநிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

1999ஆம் ஆண்டு இதே மொடீரா மைதானத்தில்தான் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் எடுத்தார்.

நவம்பர் 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக சதம் எடுத்து சச்சின் தனது 20ஆண்டு கால கிரிக்கெட்டை கொண்டாடியதும் இதே மைதானத்தில்தான்.

சச்சின் தனது 50-வது டெஸ்ட் சதத்தை இங்கு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் நிறைய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment