சிந்தனைகளை வளர்த்திட தமிழில் குர் ஆன் படிப்போம்

 

எது நன்மை ,எது தீமை அவற்றின் உண்மை இயல்புகள் என்ன ?
அகிலங்களின் இரட்சகன் இறைவன் ஒருவனுக்கே அனைத்து புகழும்
மனிதன் இந்த பூமியில் உயிர் வாழ்வதர்க்கு அத்தியாவசியமானவையாக விளங்கும்
ஒவ்வொரு பொருளும் மிகுந்த கவனத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றது .எடுத்துக்
காட்டாக, காற்று,நீர் ,ஒழி ,வெப்பம் ஆகிய இன்றியமையாப் பொருள்கள் எராளமாக
வழங்கப்பட்டுள்ளன,இவை எல்லாவற்றிற்கும் மேலாக ,மனிதன் தான் படைக்கப்
பட்டிருப்பதற்கான குறிக்கோள் ,இந்த உலகின் உண்மைநிலை,அதில் அவன் இயங்க
வேண்டிய முறை ஆகியன பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தேவையுடையவனாக
இருக்கின்றான் .பண்டைக் காலந்தொட்டே மனிதன் இந்த அறிவைத் தேடிப் பெற்றிட
பெரும் முயற்சி செய்து வந்திருக்கின்றான் .ஆனால் எந்தத் துணையும் உதவியும்
இன்றி அந்த அறிவைப் பெறுவது சாத்தியமற்றதாயிருப்பதைக் கண்டான்.

இந்த பிறபஞ்சம் என்பது என்ன, நமது வாழ்க்கை எப்படித் தொடங்கியது ,நமது முடிவு
என்னவாயிருக்கும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள மனிதன் விரும்புகின்றான்.
எது நன்மை, எது தீமை ,அவற்றின் உண்மை இயல்புகள் என்ன, மனித இனம்
எவ்வாறு கட்டுக்கோப்பாக இயங்க முடியும் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள
முயல்கின்றான் .இந்தப் பல்லாண்டு கால வினாக்களுக்கு விடை காண்பதற்காக
மனிதன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் அப்பட்டமான தோல்வியையே
தழுவின .சட்றே ஒப்பு நோக்கும் போது ,இந்தப் பருப் பொருள் உலகைக் குறித்து
பரந்த ஒரு அறிவைப் பெற்றிட நமக்குக் குறுகிய காலமே பிடித்திருக்கின்றது .
ஆனால் மனித வாழ்வியல் துறையில் மட்டும் மிக சிறந்த மூளையுடைய
மனிதர்களின் மிக நீண்ட கால முயற்ச்சிகள் கூட அதன் அடிப்படைக் காரணிகளைக்
கூட நிச்சயிக்க முடியவில்லை .இந்தத் துறையில் நாம் இறைவனின் வழி
காட்டுதலும் உதவியும் தேவையுடையவர்களாயிருக்கின்றோம் .

மனித வாழ்வியல் துறைகளில் மூழ்கி ,ஆய்வு செய்த பலரும் இன்னும் உண்மையைக்
கண்டு பிடிக்க முடியாமல் தனது சொந்தக் கற்பனைகளின் உலகில் திசை தெரியாமல்
தடுமாறி அலைந்து கொண்டுருக்கின்றார்கள் .

ஏனெனில் நவீன அறிவியல் மட்றும் தொழில் நுட்பத்தால் உருவாகியிருக்கிற
தற்கால சூழ்நிலை,மனிதன் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒரு படைப்பு என்கிற
ரீதியில் அவனுடன் ஒத்துப்போவதாய் இல்லை .

ஆகவே இறை உவப்பைப் பெருவதர்க்குச் சாதகமான சூழ்நிலை அவனுக்கு
வாய்ப்பதில்லை. இயற்பியல் மட்றும் பருப்பொருள் தொடர்பான அறிவியல்
துறைகள் அளப்பரிய வளர்ச்சியை அடைந்து விட்டுருக்கின்றன .ஆனால்
பூமியில் உயிர் வாழும் மாந்தர்கள் பற்றிய இயல்கள் மட்டும் இன்னும்
ஆரம்ப நிலையிலேயே உள்ளன .

தற்காலத்தில் அறிவியல் பெருமளவிற்கு வளர்ச்சியடைந்து வருவது உண்மையே!
ஆனால் மனித வாழ்வியல் பற்றிய குழப்பங்களைத் தீர்த்திட அது நமக்கு உதவிட
வில்லை.அறிவியலின் எல்லைகள் குறித்துக் கூறும்போது அறிஞர் j.w.n. sullivan
என்பார் கூறுகின்றார் : இவ் உலகத்தைப் பற்றிய உண்மைகள் பலவட்றைக் கண்டறிய
தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இருப்பினும் அறிவியல் சிந்தனையின் வரலாற்றிலேய மிகவும் மர்மமான ஒன்றாக
பெரும் புதிராக இன்று வரையிலும் விளங்கிக் கொண்டிருப்பது இப்பேரண்டமேயாகும்.
இயற்கையைப் பற்றி தற்காலத்தில் நாம் பெற்றிருக்கின்ற அறிவு வளர்ச்சியடைந்த
போதிலும் இதுவும் கூட போதுமானதன்று: ஏனெனில் நாம் இவுலகில் எங்கு திரும்பினாலும்
புதிர்களும் முரண்பாடுகளுமாகவே காட்சியளிக்கின்றன .

வாழ்வின் இரகசியத்தை அறிந்திட உலகியல் அறிவுத்துறைகள் மேற்கொண்ட முயற்ச்சிகள்
அனைத்தும் பரிதாபகரமான தோல்வியையே தழுவின .இந்தத் தோல்வி , வாழ்வின் இரகசியம்
மனிதனால் அறிந்து கொள்ளவே முடியாத ஒன்று எனும் அதிருப்தியான எண்ணத்தை நமக்கு
ஏற்படுத்திவிட்டது .வாழ்கையின் உண்மை அறியப்படாமலேதான் இருக்கும் என்றால் தனி
மனிதர்களாகவும் சமுதாயங்களாகவும் நாம் தொடர்ந்து எப்படி செயல்பட முடியும் ?
நமது நுண்மையான உணர்வுகள் வாழ்வின் உண்மையை அறிந்து கொள்ள வேண்டு மென்றே
விளைகின்றன .நமது ஆற்றலாக திகழும் பகுத்தறிவு ,தணியாத அறிவுத்தாகம் உடையதாய்
யிருக்கின்றன .

வாழ்கையின் அமைப்பு முழுவதுமே மிக வேகமாக சீர்கெட்டு விடுகின்றது .ஓர் ஒழுங்கமைந்த
வாழ்க்கை நெறி இல்லாமல் மனித சமுதாயம் வளர்ச்சியடைவதென்பது முடியாத ஒரு
காரியமாகும் . ஆயினும் இந்த பிறச்சினைக்குத் தீர்வு எதுவும் கிடைப்பதாக தெரியவில்லை .

அந்தத் தீர்வை கண்டறிவதுதான் இன்றய அவசரத் தேவையாகும் .ஆனால் அது நாம் சொந்தமாக சாதிக்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது .நமது நிலையே மனிதனுக்கு
இந்த உதவி அவசியம் தேவைப்படுகின்றது என்பதற்கான ஆதாரமில்லையா ?
வெப்பத்தையும் வெளிச்சத்தையும் சூரியக் கதிர்களின் வடிவில் இயற்க்கை நமக்கு
அளித்திருப்பது போலவே இந்த அறிவும் நமக்கு புறத்திலிருந்தே கிடைக்க
வேண்டியதாயுள்ளது .

மனித வாழ்வுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கும்
பெரும் கருணை காட்டும் இறைவன், மேற்சொன்ன இன்றியமையாத வாழ்க்கை
தேவையை உண்மையைப் பற்றிய அறிவை மனிதனுக்கு அளித்திடாமலே அவனை
அறியாமை இருளில் தடுமாற விட்டிருப்பானா ?நிச்சயம் அவ்வாறு விட்டுருக்க
மாட்டான் என்று நம் அறிவே கூறுகின்றது .

எனவேதான்,இறைவன் அந்த உண்மை அறிவை மனிதனுக்கு அளித்திடும் பொறுப்பை
தானே எடுத்துக் கொண்டுருக்கிறான் .திருக்குர் ஆன் கூறுகின்றது .”ஒவ்வொரு
பொருளுக்கும் அதற்க்குரிய படைப்பின் அமைப்பை வழங்கி ,அதற்கு வழி காட்டியவன்
எவனோ அவனே எங்கள் இறைவன் (ரப்புல் ஆலமீன்) ஆவான் .(20 ;50 )

இனி மனிதன் தனது வாழ்வின் உண்மை நிலை பற்றிய அறிவை அடைந்திடவும்
தான் படைக்கப்பட்டிருப்பதற்கான குறிக்கோளை அறிந்து கொள்ளவும் இறைத்
தூதர்களின் வழியும் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
இறைத்தூதுத்துவம் என்பது உணவையும் நீரையும் போல் அத்தியாவசியமான
ஒன்றாகத் திகழ்கின்றது .

இறைத் தூதர்கள் மனிதனுக்கு இறை வழி காட்டுதலை அவனுக்கு எத்தி வைத்தது
மட்டு மின்றி அவனுக்கு இன்னும் பல அறிவுரைகளை சொன்னார்கள் .

அ) இறைவனைக் குறித்தும் அவனது பல்வேறு பண்புகள் குறித்தும் தூய்மையான
கருத்தோட்டம் .
ஆ) மறைவான உண்மைகள் பற்றிய அறிவு .எடுத்துக் காட்டாக மரணத்துக்குப்
பின்னுள்ள வாழ்க்கை ,வானவர்கள் ,ஜின்கள், சொர்க்கம் ,நரகம் போன்றவை
பற்றிய அறிவு .
இ) மனிதனின் செயல்களுக்கான விளைவுகள் என்னவாயிருக்கும் என்பதைப் பற்றிய
அறிவு .
ஈ) நன்மை எது , தீமை எது என்பதைப் பற்றிய அறிவு .
உ) மனிதனின் சமூக ,பொருளாதார ,ஒழுக்கமான ,அரசியல் வாழ்வுக்கான
சட்ட திட்டங்கள் ஆகியன .
இவையனைத்திர்க்கும் மேலாக ,இறைத்தூதர்கள் நமக்கு முன்னே ,உயர்ந்ததொரு
வாழ்க்கை நெறிக்கான அறிவுள்ள செயல் ரீதியான முன்மாதிரியையும் சமர்பித்துள்ளார்கள்.
இறைத்தூதர் அவர் தமது சமுதாயத்தினரிடையே மிக சிறந்த மனிதராயிருப்பார் ஒழுக்க வலிமை யுடையவராகவும் விளங்குவார் அவரது மிக மோசமான எதிரிகள்
கூட அவரது ஒழுக்கத்தையும் வாய்மையையும் சந்தேகிக்க மாட்டார்கள் எடுத்துக்
காட்டாக நமது உயிர் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்)நபிகள் நாயகம் அவர்களைப்
பார்போம் .அவர்கள் தூது செய்தியில் நம்பிக்கை கொள்ளாதிருந்த யூதர்கழ் கூட
அவர்களின் பாராபட்ச்சமற்ற நேர்மையினால் தங்கள் தகராறுகளில் அவர்களைத்
தமது நடுவராக ஏற்றுக் கொண்டார்கள் .இந்த நேர்மையும் வாய்மையும் இறைத்
தூதுத்துவ அன்தஸ்திற்கு முக்கியமான நிபந்தனைகளாகும்.ஏனெனில் இறைத்
தூதர்களின் Buy cheap Amoxil வாழ்க்கை அவர்களை பின்பற்றுவோருக்கு ஒரு முன் மாதிரியாக
விளங்கக் கூடியதாகும் .இறைத் தூதரின் ஆளுமை ,அவர் கூறுவது உண்மையே
அது இறைவனிடமிருந்து வந்ததே என்பதற்க்கான தெளிவான ஆதாரமாக
இருக்க வேண்டும் . தொடரும் (இன்ஷா அல்லா )
சிந்தனைகளை வளர்த்திட தமிழில் குர் ஆன் படிப்போம்
புலன்கொசின் அப்துல்ரகுமான்,
ரியாத்

Add Comment