இறைவனே அதிகாரி ஏனையவர் ஊழியரே

இறைவனே அதிகாரி ஏனையவர் ஊழியரே

இன்னல் என்னும் இருட்டறைக்கு
இன்பம் என்னும் ஒளியளித்து
இம்மண்ணுலக மானிடா்களை
இமய அரணாய்க் காத்தருளும்
இறைவனுக்கே புகழனைத்தும் உரியது……

உலகம் தொட்டு அனைத்தையும் படைத்து அவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் தன்னிகரில்லா இறைவன் மட்டுமே உயிரினங்கள் மீது மற்றும் ஏனைய அனைத்தின் மீதும் அதிகாரமுடையவன். எந்நாட்டில் இல்லாத வழக்குமுறையாக என் தமிழ் நாட்டில் மட்டும் எங்கு பார்த்தாலும் ‘அதிகாரி’ என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.

ஒரு மனிதனுக்கு அவனது ஆன்மாவை மாய்த்துக் கொள்ளவோ, உடலை வருத்திக் கொள்ளவோ அதிகாரம் கிடையாது என்று அனைத்து மதங்களுமே ஒரு சேர உரைக்கின்றது. அப்படியிருக்க பிறரின் மீது அதிகாரம் செய்ய இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது

தனியொரு மனிதன் கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் காவல்துறை அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு மனு கொடுக்கவோ அல்லது சான்றிதழ் பெறுவதல் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக சென்றால், அவர்களை மட்டமாக நடத்துவது, கேட்டால் ‘நான் அதிகாரி; நான் நினைத்தால் உனக்கு இந்த சான்று கிடைக்க விடாமல் செய்து விடுவேன்’ என மிரட்டுவது. போதாக்குறைக்கு இலஞ்சம் வாங்குவது வேறு தனி.

சமீபத்தைய நீதிமன்றக்கருத்தை நாம் அறிவோம், “இலஞ்சம் பெறாமல் எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் வேலை நடப்பதில்லை; எனவே இலஞ்சத்தை சட்டமாக்கி விடலமா?” என்று நீதி கவலைப்பட்டது. இந்தக் கருத்தைப் பல செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் நகைச்சுவையாகச் சித்தரித்தன. இதன் காரணமாகவோ என்னமோ, நாட்டு மக்களும் மடமையால் கேலிக்கூத்தாக்கி சிரித்தனர் இக்கருத்தை நோக்கி. சிந்திக்க வேண்டாமா ஆறறிவுடையோரே…

இதனைப்பிற நாட்டவர் கேள்விப்பட்டால் நம்மை எள்ளி நகையாட மாட்டாரா? அரசாங்கம்தான் இதற்கெல்லாம் முன்னோடி என்று கூறி ஒதுங்க Doxycycline online வேண்டாம். ஒவ்வொரு இந்தியக் குடிமகன்தான் இந்தியாவின் மன்னன் என்பதை மறந்து விட வேண்டாம். நாட்டிற்கு சிறிய கறை ஏற்பட்டாலும் அது தன் மீது பட்டதாக நினைத்து களைய முயற்சி செய்யுங்கள். எந்நாட்டிற்காக நான் இவ்வளவு தியாகம் செய்தேன் என்று தம்பட்டம் அடியுங்கள். கம்பீரமாக இருக்கும்.

தமிழக அரசுக்கு வேண்டுகோள்

அரசு அலுவகங்களிலுள்ள அலுவலர்கள் தங்களை ‘அதிகாரிகள்’ என்று கூறுவதை நிறுத்த சட்டம் இயற்ற வேண்டும். மேலும் அலுவலகப் பலகைகள், ‘ஸ்டாம் பேட்’ என்று சொல்லக் கூடிய அரசு ஆணைகள், எல்லாவற்றிற்கும் மேலாக அரசுப் பதிவேட்டிலிருந்தே ‘அதிகாரி’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும். இந்த வேண்டுகோள் இந்தியாவிலுள்ள அனைத்து நீதி மன்றங்களுக்கும் பொருந்தும்.

எடுத்துக்காட்டாக திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்திற்குட்பட்ட கடையநல்லுர் நகராட்சிப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திலுள்ள, கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் அறைக்கு வெளியே ‘அதிகாரி’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருக்கும். கிராம நிர்வாக அதிகாரி என்று அச்சு மையில் (ஸ்டாம்ப் பேடு) பொறிக்கப்பட்டிருக்கும். அப்படி அச்சடிக்கப்பட்டு அந்த அலுவலரின் கையொப்பமும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். இது உண்மையாகவே உள்ளது. எனக்குத் தெரிந்து இச்சிறிய நகர்மன்றத்தில் ஒரு அலுவலர். இது போன்று இன்னும் எத்தனையோ அலுவலர்கள் உள்ளனர்.

இவர்களெல்லாம் ‘நாம் அதிகாரி; மக்களை அதிகாரம் செய்யப் பிறந்தவர்கள்’ என்ற எண்ணத்தை அடியோடு மறந்து விட்டு ‘மக்கள்தான் நம் முதலாளி; அவர்களின் வரிதான் நமக்கு சம்பளம்; மக்களுக்கு ஊழியனாக இருந்து ஊழியம் செய்வது நம் கடமை’ என்று எண்ணிக் கொள்வதோடு மட்டுமல்லாது, அச்சுப் பலகை, அலுவலகம் போன்ற இடங்களிலும் ‘அதிகாரி’ என்ற வார்த்தையை நீக்கி விட்டு ‘அலுவலர்’ என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

மாண்புமிகு முதல்வர் இதனை சாதாரணமாக தூக்கிப்போடாமல், நாட்டின் இறையாண்மையென நினைத்து முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பத்திரிக்கைகளின் பங்கு
நாட்டின் தலையெழுத்து திருப்பிப் போடும் சக்தியாக விளங்கும் பத்திரிக்கைகள் இதில் பெரும் பங்காற்ற வேண்டும். பத்திரிக்கைகளிலும் ‘அதிகாரி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மெத்தனமில்லாத சில அலுவலர்களுக்கும் இதனைக்கண்டால் கர்வமுறுவர். 50 ருபாய் இலஞ்சம் வாங்குபவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு 50 க்குப் பதிலாக 500 ருபாய் வாங்குவார்கள்.
நீங்கள் ‘அலுவலர்’ என்று இட்டுப் பாருங்கள்; குறைகளை நேர்மையாக நடுநிலையோடு சுட்டிக் காட்டுங்கள். 5 பைசா வாங்குவதற்குக் கூட அஞ்சுவார்கள். எனவே பத்திரிக்கைகள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி நாடு முன்னேற வழி வகை செய்ய வேண்டுமென்றும், இச் செய்தியினை வெளியிடுவதின் வாயிலாக தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

– க.கா.செ. (த/பெ, க.செ. காஜா மைதீன்)
கடையநல்லூர்

Add Comment