வினையான சிகரெட்: லேப்டாப் வெடித்து ஒருவர் பலி!

சிகரெட் பிடித்துக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவர், தூங்கியதையடுத்து லேப்டாப் வெடித்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தவர் சப்தரிஷி சர்கார். இவர் தன் அறையில், சிகரெட் பிடித்துக் கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். நீண்டநேரம் no prescription online pharmacy வேலை பார்த்த களைப்பில் தூக்கம் வந்து அப்படியே உறங்கி விட்டார்.

இந்நிலையில் அவர் கையிலிருந்த சிகரெட் லேப்டாப்பில் விழுந்து, லேப்டாப் வெடித்து அறையினுள் தீ பரவியது. இதில் சர்கார் பரிதாபமாக பலியானார். மூடிய அறையினுள்ளிலிருந்து புகை வெளியேறாததால் சர்கார் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Thanks:inneram.com

Add Comment