கடையநல்லூர் எவரெஸ்ட் பள்ளியில் மாணவனை ஆசிரியர் அடித்ததனால் மாணவன் மருத்துவமனையில் அனுமதி

கடையநல்லூர் எவரெஸ்ட் பள்ளியில் மாணவனை ஆசிரியர் அடித்ததனால் மாணவன் மருத்துவமனையில் அனுமதி

கடையநல்லூரில் உள்ள மங்களாபுரம் அருகில் உள்ளது எவரெஸ்ட் பள்ளி.இந்த பள்ளியில் கடையநல்லூரில் இருந்து பல மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு கடையநல்லூர் பேட்டையை சேர்ந்த துபாய் டிராவல்ஸ் உரிமையாளர் பக்கீர் முகைதீன் அவர்களின் மகன் அப்துல் ரஹ்மான்(வயது 6) ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று(06-02-2012) திங்கள் கிழமை காலையில் பள்ளி செல்லும் பொழுது அப்துல் ரஹ்மான் தன்னுடைய ID Card- ஐ மறதியில் பள்ளிக்கு எடுத்து செல்லவில்லை. ID Card ஏன் எடுத்து வரவில்லை என்று மாணவனிடம் பள்ளி ஆசிரியர் கேட்டுள்ளார்.அதற்க்கு அப்துல் ரஹ்மான் எடுத்து வர மறந்து விட்டேன் என்று கூறியும் ஆசிரியர் மாணவன் சொல்லவதை கேட்க்காமல் குச்சியால் இடுப்பு பகுதியில் அடித்துள்ளார்.அடி பலமாக விழவே மாணவன் அப்துல் ரஹ்மான் அழுகையுடன் பள்ளியில் சோர்வாக அமர்துள்ளார்.இது நடந்த சில மணி நேரம் கழித்து காலை சுமார் Doxycycline online 11 மணியளவில் பள்ளி நிர்வாகம் மாணவனின் வீட்ற்கு போன் செய்து அப்துல் ரஹ்மானுக்கு உடம்பு சரியில்லை என்ற தகவலை தெருவித்துள்ளது.

இந்த தகவலை அறிந்தவுடன் மாணவனின் உறவினர் ஹாஜா மைதீன் பள்ளிக்கு சென்று விபரம் கேட்டுள்ளார்.அதற்க்கு பள்ளி ஆசிரியர் மாணவன் அப்துல் ரஹ்மானுக்கு உடம்பு சரியில்லை என்ற காரணம் கூறினார்.ஆசிரியர் சொன்ன பதிலில் திருப்தி இல்லாமல் அப்துல் ரஹ்மானிடம் என்ன நடந்ததது என்று விசாரித்துள்ளார்.

அதற்க்கு அப்துல் ரஹ்மான்…நான் இன்று ID Card எடுத்து வரவில்லை என்பதற்காக என்னை குச்சியை வைத்து இடுப்பில் அடித்தனர் அன்று அழுகையுடன் கூறவதை கேட்டு ஹாஜா மைதீன் அதிர்ச்சி அடைந்த்ததுடன் ஆசிரியரிடம் ஏன் அடித்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்க்கு பள்ளி நிர்வாகம் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை.அப்துல் ரஹ்மானை வீடிற்கு அழைத்து சென்று நடந்த விபரத்தை வீட்டில் தெருவித்தவுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த மாணவனுடைய தந்தையின் நண்பர் செய்யத் ஷரியத் பாவாவுடன் சில நண்பர்கள் பள்ளிக்கு சென்று ஏன் இவ்வாறு மாணவனை அடித்தனர்,யார் அந்த ஆசிரியர் என்று விசாரித்துள்ளனர்.ஆனால் பள்ளி நிர்வாகம், நாங்கள் ஆசிரியரை கண்டித்து விட்டோம் நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் என்று அவர்களை கேட்டு கொண்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பேட்டை ஜமாத்தில் தகவல் தெருவிக்கபட்டு பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டனர். ஆனால் ஜமாத்தில் இருந்து எந்தவித  பதிலும்  வராத காரணத்தால் இன்று (07-02-2012) இலத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று பள்ளி ஆரியர் மீது புகார் அளிக்கப்பட்டு  நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்ளபட்டது.

இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் ஆகியும் பள்ளி நிர்வாகம் மாணவன் அப்துல் ரஹ்மான் நிலை என்னவென்பதைபற்றி அறிந்து கொள்ள வில்லை என்பதுதான் கவலையான விஷயம்.இதனை தொடர்ந்து இன்று காலை நகராட்சி அருகில் பொதுமக்கள்  பள்ளி வாகனத்தை முற்று கையிட்டு ஆசிரியரிடம் முறையிட்டதால் சற்று பரராப்புடன் காணப்பட்டது.

Add Comment