கடையநல்லூரில் குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் குழு ஆய்வு

கடையநல்லூரில் மேற்கொள்ளப்பட Buy Amoxil Online No Prescription இருக்கும் குடிநீர் புணரமைப்பு பணிகளை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.கடையநல்லூரில் சுமார் 22 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் குடிநீர் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட நிலையில் புணரமைப்பு பணியின் போது அமைக்கப்பட உள்ள வாட்டர்டேங்குகள் அமையும் பகுதி, குடிநீருக்காக புதிதாக உருவாக்கப்பட உள்ள இரண்டு கிணறுகள் அமையும் பகுதி போன்ற பணிகளை சென்னையில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.நகராட்சி நிர்வாக ஆணையக தலைமை பொறியாளர் ரகுநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியரிங் டைரக்டர் தனுசு, தலைமை பொறியாளர் ராமச்சந்திரன், கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், நிதிநிலை அதிகாரி ராஜேந்திரன், மண்டல நிர்வாக பொறியாளர் கனகராஜ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு குடிநீர் புனரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.குழுவினருடன் நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப், நகராட்சி இன்ஜினியர் நடராஜன், இளநிலை பொறியாளர் அகமதுஅலி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Add Comment