விளையாட்டு நிர்வாகிகள் வயது உச்சவரம்பு* டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

விளையாட்டு அமைப்புகளின் தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு வயது உச்சவரம்பை நிர்ணயிக்கும்படி மத்திய அரசை, டில்லி ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், மிக நீண்டகாலமாக பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு அமைப்புகளின் தலைவர் Amoxil online பதவியில் பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் நீடிக்கின்றனர். இவர்களது ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி, தேசிய விளையாட்டு அமைப்புகளின் தலைவர் பதவியில் 12 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாது. தவிர, தலைவர்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் ஓய்வு வயது 70 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இக்கட்டுப்பாடுகள் விளையாட்டு அமைப்புகளில் தலைவர்களாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் கல்மாடி கடந்த 1996 முதல், சுமார் 15 ஆண்டுகள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக உள்ளார். இவர் பதவியில் தொடர முடியாது. இதே போல பா.ஜ., தலைவர் வி.கே.மல்கோத்ரா, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவராக இருக்கிறார். அகாலி தள கட்சியின் சுக்தேவ் திண்ட்சா, இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பின் தலைவராக 14 ஆண்டுகளாக உள்ளார். <காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேப்டன் சதிஷ் சர்மா, “ஏரோ கிளப்’ தலைவராக 24 ஆண்டுகள் உள்ளார். இதை தவிர திக்விஜய் சிங்(துப்பாக்கி சுடுதல்), அஜய் சிங் சவுதாலா(டேபிள் டென்னிஸ்), யஷ்வந்த் சின்ஹா(டென்னிஸ்), அபய் சிங் சவுத்தாலா(குத்துச்சண்டை) போன்ற அரசியல்வாதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தேசிய விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மீண்டும் பதவிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டது.

தடை மறுப்பு:புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம், பாட்மின்டன், நீச்சல், வில்வித்தை உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகள் சார்பில் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மன்மோகன் அடங்கிய “பெஞ்ச்’ விசாரணை நடத்தியது. இவர்கள், அரசின் கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். விளையாட்டு அமைப்பு தலைவர்களின் 70 வயது உச்சவரம்பு, 12 ஆண்டுகள் பதவிக் காலம் போன்ற தேசிய விளையாட்டு கொள்கையை அமல்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக் கொண்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து கல்மாடி போன்றவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பரிசு:இது குறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கூறுகையில்,””டில்லி ஐகோர்ட்டின் உத்தரவு, நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும் விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது,”என்றார்.

Add Comment