ரூ. 20 கோடி சம்பளம் கேட்ட கவாஸ்கர்* பி.சி.சி.ஐ., அம்பலம்

ஐ.பி.எல்., நிர்வாக குழுவின் உறுப்பினராக பணியாற்ற கவாஸ்கர் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டதாக, பி.சி.சி.ஐ., அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட சர்ச்சை காரணமாகவே ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008ல் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஐ.பி.எல்., அரங்கில் கோடிகள் தாராளமாக புழங்கின. சுமார் ரூ. 470 கோடி சுருட்டிய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இவர் மீதான ஊழல் விசாரணை தற்போது நடந்த வருகிறது.

இந்தச் சூழலில் ஐ.பி.எல்., அமைப்பின் நிர்வாக கவுன்சிலில் உறுப்பினராக இருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர், அதிக சம்பளம் கேட்ட விபரம் அம்பலமாகியுள்ளது. லலித் மோடி தலைவராக இருந்த காலத்தில் இவருக்கு, 5 ஆண்டுகளுக்கு ரூ. 20 கோடி அளிப்பதாக வாய்மொழியாக கூறப்பட்டதாம். இது குறித்து சமீபத்தில் நடந்த பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் அளிக்க முடியாது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பின் ஐ.பி.எல்., நிர்வாக குழுவில் இருந்து கவாஸ்கரை நீக்கியுள்ளனர்.
இப்பிரச்னையில், நேற்று மவுனம் கலைத்தார் கவாஸ்கர். தனக்கு பி.சி.சி.ஐ., ஒரு காசு கூட சம்பளம் வழங்கவில்லை என புகார் கூறினார்.

இது குறித்து கவாஸ்கர் கூறியது:ஐ.பி.எல்., நிர்வாக குழுவின் உறுப்பினராக பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை, எனது பணிகளுக்காக பி.சி.சி.ஐ., ஒரு காசு கூட சம்பளம் வழங்கவில்லை. இதனை நினைவுபடுத்தி பல முறை “இ-மெயில்’ அனுப்பினேன். இதற்கு தீர்வு காண, ஐ.சி.சி., தலைவர் சரத் பவார் முன்வந்தார். தனது முன்னிலையில், பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர் மற்றும் நான் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்டேன்.
பொதுவாக பெண்களிடம் வயதையும், ஆண்களிடம் சம்பளத்தையும் கேட்கக் கூடாது. இதன் அடிப்படையில் ஐ.பி.எல்., அமைப்பில் எனக்கு வழங்க ஒத்துக் கொண்ட தொகை பற்றி தெரிவிக்க இயலாது. கொச்சி அணியின் தலைமை பொறுப்பை இப்போதைக்கு ஏற்க முடியாது. அவர்களது பிரச்னைகள் தீரும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளேன். கொச்சி தவிர, மற்ற ஐ.பி.எல்., அணிகளும் தலைமை பொறுப்பை ஏற்கும்படி என்னை அணுகியுள்ளன.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

பி.சி.சி.ஐ., மறுப்பு:கவாஸ்கரின் புகாரை பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் மறுத்தார். இது குறித்து இவர் கூறுகையில்,””சம்பளம் தொடர்பாக பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகருக்கு, கவாஸ்கர் இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில், ஆண்டுக்கு ரூ. 4 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 20 கோடி கேட்டிருந்தார். இதற்கான ஆதாரம் எதுவும் அளிக்கவில்லை. ஏற்கனவே Levitra No Prescription செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கடந்த 3 ஆண்டுகளாக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு காலத்துக்கு மட்டுமே சம்பளம் அளிக்கப்படவில்லை ,”என்றார்.
இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர் கூறுகையில்,””கவாஸ்கருக்கு சம்பள பாக்கி எதுவும் இல்லை. அவர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்,”என்றார்.

Add Comment