மக்கட்டி துராப்ஷா மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மக்கட்டி துராப்ஷா மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தை ஏற்க்கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு எதிராக ஒரு இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரையை கடையநல்லூர் பரசுராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த துராப்ஷா என்பவர் தன்னுடைய Facebook பக்கத்தில் பகிர்ந்து கொண்டதன் காரணமாக கடையநல்லூர் இஸ்லாமிய மக்களின் கோபத்திற்கு ஆளானார்.

இதனையொட்டி கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளியில் ஜமாதுல் உலமா சபை மற்றும் பரசுராமபுரம் ஜமாஅத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,இஸ்லாத்திற்கு எதிரான கருத்தை துராப்ஷா Facebook பக்கத்தில் பகிர்ந்து கொண்டது மற்றும் அவரின் இஸ்லாத்திற்கு எதிரான சில நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு.துராப்ஷா இஸ்லாத்தில் இருந்து விலக்கி வைக்கபட்டுளார் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு அவரிடம் கையெழுத்து வாங்கிகொள்ளபட்டது.

இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களாகவே துராப்ஷா மன்னிப்பு கோரி தான் இஸ்லாத்தில் இணைய முயல்வதாக வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனை உண்மையாக்கும் விதமாக Lasix No Prescription நேற்று 09-02-2012 வியாழகிழமை கடையநல்லூர் பைசுல் அன்வர் அரபிக்கல்லூரியில் நெல்லை மேற்கு மாவட்ட அரசு ஹாஜி A.Y. முகைதீன் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,ஜமாதுல் உலமா சபை மற்றும் கடையநல்லூரின் அனைத்து இயக்கங்களின் முன்னிலையில் துராப்ஷா தான் பகிர்ந்து கொண்ட இஸ்லாத்திற்கு எதிரான கருத்து தவறு என்றும் இனிமேல் இது போன்று இஸ்லாத்திற்கு எதிரான கருத்தை என் மனதில் இருந்து அகற்றி முழு மனதுடன் மன்னிப்பு கோருகிறேன் என்று கூறி கலிமா சொல்லி இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டு எழுதி கையெழுத்திட்டார்.அனைத்து இயக்களின் சார்பில் வந்திருந்த அனைவரும் அதில் கையெழுத்திட்டனர்.

>

தகவல்:அசன்,ஷாகுல்,உவைஸ்

Add Comment