நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்தால் ரத்தக்கசிவு நோய் ஏற்படும்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் “ஹீமோகுளோபின்’ கிளப் துவக்கவிழா, ஹீமோபீலியா(ரத்தக்கசிவு)நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஹீமோகுளோபின் கிளப் கூட்டமைப்பு தலைவர், டாக்டர் அன்புராஜன் பேசியதாவது: மனிதனின் உடல் பாகங்களில் Buy Doxycycline Online No Prescription ஏற்படும் ரத்தக்கசிவு என்பது பரம்பரை நோயாகும். இது பெண்களிடமிருந்து, ஆண்களுக்கு பரவுகிறது. 10 ஆயிரம் ஆண்களில் ஒருவரும், 10 லட்சம் பெண்களில் ஒருவரும் இந்நோயால் பாதிக்கப்படுவர். அதாவது, பெண்களை விட ஆண்களைத்தான் இந்நோய் அதிகமாக தாக்கும். இந்தியாவில், 2 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 45 ஆயிரம் பேரும், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 3,500 பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயை குணப்படுத்த முடியாது. ஆனால், சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த ரத்தக்கசிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. முன்னர் இங்கிலாந்து, ரஷ்ய அரசு குடும்பத்தில் காணப்பட்ட இந்நோய் தற்போது, நமது நாட்டில் சாதாரண மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நோய் ஏற்பட்டவர்களுக்கு மனநிலை, பொருளாதார பாதிப்பும் ஏற்படும், என்றார். டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Add Comment