சரக்கு விமானத்தில் வெடிக்குண்டு: யெமனில் மருத்துவ மாணவி கைது

துபாய் மற்றும் பிரிட்டனிலிருந்து அமெரிக்காவிற்கு சென்ற சரக்கு விமானங்களில் வெடிப்பொருட்கள் கண்டெடுத்ததைத் தொடர்ந்து அதுத்தொடர்பாக Buy Amoxil யெமனில் ஒரு மருத்துவ மாணவி கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

கார்கோ நிறுவனத்திலிருந்து கிடைத்த தொலைபேசி எண்ணை பின்தொடர்ந்து தலைநகரான சன்ஆவில் வசிக்கும் மருத்துவ மாணவியும், அவருடைய தாயாரும் கைதுச் செய்யப்பட்டனர்.

சவூதி வம்சாவழியைச் சார்ந்த இப்ராஹீம் ஹஸன் அல் அஸீரியை இவ்வழக்கில் முக்கியமாக சந்தேகிப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் வெடிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டதுதான் பிரிட்டனிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லவிருந்த விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்குண்டு என பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.

ஷிகாகோவைச் சார்ந்த யூத குடும்பத்தினரின் முகவரி இந்த வெடிப்பொருள் அடங்கிய இரண்டு பார்சலில் எழுதப்பட்டிருந்தது. அச்சு இயந்திர காட்ரிட்ஜின் உள்ளே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஒரு பெட்ரோலியம் பொறியாளரின் மகள் தான் கைதுச் செய்யப்பட்ட மருத்துவ மாணவி. அதேவேளையில் அமெரிக்க அதிகாரிகள் குறிவைத்தது இப்ராஹீம் ஹஸன் அல் அஸீரியை என நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ராயிட்டர்ஸ் ஆகிய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யெமனில் அல்காயிதாவின் முக்கியத் தலைவராக இப்ராஹீம் ஹஸன் கருதப்படுகிறார். சவூதி உளவுத்துறை தலைவர் இளவரசர் முஹம்மது பின் நாயிஃபின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திட்டம் வகுத்தவர் இப்ராஹீம் ஹஸன் எனக் கூறப்படுகிறது.

ஆனால், அத்தாக்குதலில் இளவரசர் நாயிஃப் தப்பிவிட்டார். இவருக்கெதிரான தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டது தற்பொழுது சரக்கு விமானங்களில் கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருளான பி.இ.டி.என் ஆகும்.

சரக்கு விமானங்களில் வெடிப்பொருள் பார்சல்கள் அனுப்பியதுத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் வழக்கறிஞர் அப்துல் ரஹ்மான் பர்மன் கூறுகையில், இரண்டு பார்சல்களில் வெடிப்பொருள் அனுப்பப்பட்டதில் சந்தேகமேற்பட்டு மாணவி கைதுச் செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு இச்சம்பவத்தில் எவ்வித பங்குமில்லை. மேலும் அவருக்கு எந்தவொரு அமைப்புடனும் தொடர்பில்லை. அவர் இந்த விஷயத்தில் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். இவ்வளவு பெரிய விபரீதமான செயலை செய்யப் போகிறோம் என்று தெரிந்து இருந்தால் அவர் தன் அடையாள அட்டையையும், தொலைபேசி எண்ணையும் அவர் கார்கோ நிறுவனத்திற்கு கொடுத்து இருப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.

அல்காயிதாவுக்கெதிராக போராட்டம் தொடரும் எனவும், அதன் பெயரில் உள்நாட்டு விவகாரங்களில் எவரையும் தலையிட் அனுமதிக்கமாட்டோம் எனவும் யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா யெமன் மீது தாக்குதலுக்கு தயாராகிறது என்ற தகவலைத் தொடர்ந்துதான் இவ்வறிவிப்பை யெமன் அதிபர் வெளியிட்டுள்ளார். அதேவேளையில், துபாயிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிப்பொருள் வந்தது பயணிகள் விமானத்தில் என கத்தர் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

யெமன் தலைநகரான சன்ஆவிலிருந்து கத்தரின் தோஹாவிற்கு சென்ற கத்தர் ஏர்வேஸ் விமானம் ஏ320 யில்தான் இந்த வெடிப்பொருள் அடங்கிய பார்சல்கள் இருந்தன. பின்னர் தோஹாவிலிருந்து துபாய் செல்லும் இன்னொரு கத்தர் ஏர்வேஸின் விமானத்தில் இவ்வெடிப்பொருள் பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னர் சரக்கு விமானத்தில் இந்த வெடிப்பொருள் பார்சல்கள் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

Add Comment