பாக்தாத்:பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் 52 பேர் பலி

ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் சர்ச் ஒன்றில் போராளிகள் பிணைக்கைதிகளாக பிடித்தவர்களை மீட்பதற்கு ஈராக் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 52 பேர் பலியாகினர்.

கத்தோலிக்க சர்ச் ஒன்றில் பிரார்த்தனைக்காக வருகைப் புரிந்த 100க்கும் மேற்பட்ட நபர்களை அல்காயிதா ஆதரவாளர்கள் என்று கூறப்படும் போராளிகள் பிணைக்கைதிகளாக பிடித்தனர். இம்மோதலில் 6 போராளிகளும் கொல்லப்பட்டதாக ஈராக்கின் உள்துறை அமைச்சர் மேஜர் ஜெனரல் ஹுசைன் கமால்
தெரிவித்துள்ளார்.

சிறையிலடைக்கப்பட்டுள்ள அல்காயிதா போராளிகள் என்று கூறப்படுவோரை விடுதலைச் செய்வதற்காக சர்ச்சிற்கு வந்தவர்களை பிணைக்கைதிகளாக போராளிகள் பிடித்ததாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் கர்ராதா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்ச்சின் மீது தாக்குதல் நடைப்பெற்றது. பெரும் குண்டுவெடிப்பிற்கு பிறகு துப்பாக்கிச்சுடும் சப்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

போராளிகள் தங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அல்-பாக்தாதியா தொலைக்காட்சி அலைவரிசை அறிவித்துள்ளது.

Buy Viagra justify;”>இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் என அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தியதாக அந்த தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. இவர்கள் ஈராக்கைச் சார்ந்தவர்களல்லர் என்றும் கூறப்படுகிறது.

ஈராக் ஸ்டாக் எக்ஸேஞ்ச் கட்டிடத்தை முதலில் போராளிகள் தாக்கியதாகவும் பின்னர் அருகிலுள்ள சர்ச்சில் நுழைந்ததாகவும் போலீஸ் கூறுகிறது.

பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் சில போராளிகள் கொல்லப்பட்டனர். பிரார்த்தனை ஹாலில் வந்த போராளிகள் முதலில் கிறிஸ்தவ பாதிரியாரை கொன்றதாக நேரில் கண்ட சாட்சி
கூறுகிறார்.

சிறையிலடைக்கப்பட்டுள்ள போராளிகளையும், பெண்களையும் விடுதலைச் செய்ய வேண்டுமென அவர்கள் அதிகாரிகளுக்கு நிபந்தனை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கூடுதல் ராணுவத்தினர் வந்து சர்ச்சில் நுழைந்தனர். சர்ச்சின் உள்பகுதியிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 37 பேர் கொல்லப்பட்டனர். 56 பேருக்கு காயமேற்பட்டது.

போராளிகள் பிணைக்கைதிகளை கொலைச் செய்வார்கள் என்பது உறுதியானதால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் அப்துல் காதிர் அல் உபைதி தெரிவித்துள்ளார்.
எல்லா போராளிகளும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment