பெண்ணடிமை !

பெண்ணடிமை !

பெண்கள் நாட்டின் கண்களென்றான் பாரதி
புண்கள்தான் அவர்களின் கண்களென்றான் ஆடவன் !

அடிமைப் படுத்தினான் பெண்மகளிரை
ஆனந்தப்பட்டான் ஆடவன் !

பிச்சையெனும் வரதட்சணையை வாங்கிப்
பேழையில் பூட்டிப் பார்த்தாய் இன்பமாக – அது
பணமெனும் பிணமடா !

பேதையெனும் சுதந்திர அன்னத்தைப் பெற்றுக்
கூட்டுக்குளடைத்து அடிமைப்படுத்துகிறாயே – அது
பாசம் காட்டும் தாய்மையடா !

பெண்ணடிமை என்பது வேண்டாமடா – நம்
பிறப்பினை நினைத்து உணர்வோமடா !

அடிமைப்படுத்தும் ஆடவரே,
அவளில்லையேல் – நீ
அடங்கிக்கிடப்பாய் வீதியிலே!

படுத்தாதே பெண்களை அடிமையாய்த்
தடுக்காதே பெண்களின் உரிமையை!

Bactrim No Prescription justify;”>வேண்டாமடா பெண்ணடிமை – அவர்க்குக்
கொடுப்போமடா முன்னுரிமை !………………….

நன்றி : “கவி ராகம்”

-சிந்தனை,
க.கா.செ.
ரியாத்

Add Comment