சூதாட்டத்தில் ஈடுபட்ட குரோனியே: சுயசரிதையில் மனம் திறந்த கிப்ஸ்

தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்தில் பகிரங்கமாக ஈடுபட்டது குறித்து, தனது சுயசரிதையில் மனம் திறந்துள்ளார் கிப்ஸ்.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ். 36 வயதான இவர் “டூ தி பாய்ன்ட்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதி வெளியிட்டு உள்ளார். இதில், தென் ஆப்ரிக்க வீரர்கள் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இவர் கடந்த 2000 ல் இந்திய தொடரின் போது, அப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் குரோனியேவுடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இவருக்கு 6 மாத தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
சூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்து தனது புத்தகத்தில் கிப்ஸ் கூறியிருப்பதாவது:
கடந்த 2000 ல் நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து, என்னிடம் பேசினார் குரோனியா. அப்போது நான் எனது அறையில் இருந்தேன். என்னிடம் வந்த அவர்,” இப்போட்டியில் 20 ரன்களுக்குள் நீ அவுட்டாக வேண்டும். அப்படி செய்தால், 7 லட்ச ரூபாய் வரை பெறலாம், என்றார்.
குரோனியே சூதாட்டத்தில் ஈடுபட்டது அது முதல் முறை அல்ல. அதற்கு முன் கடந்த 1996 ம் ஆண்டு இந்திய தொடரின் போதும், அவருக்கு சூதாட்டத்தில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அணி வீரர்கள் அனைவரையும் அழைத்து, இந்தியாவுக்கு எதிரான பைனல் போட்டியில், நாம் தோற்றால் ரூ. 1 கோடி வரை கிடைக்கும் என்றார். இதில், ஒரு இந்திய வீரருக்கும் தொடர்பு உண்டு. அவரை எனக்கு தெரியும். ஆனால் அப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி தோற்கும் நிலைமையில் தான் இருந்தது. அணியில் 6 வீரர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். அதனால் சூதாட்டத்தில் ஈடுபடும் எண்ணத்தை அனைவரும் கைவிட்டோம். அப்போட்டியில், சச்சின் சதம் அடித்து அசத்த, இந்திய அணி வெற்றி பெற்றது. அணியில் உள்ள வீரர்களில் 90 சதவீதம் பேர் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே, சூதாட்டத்தில் ஈடுபட முடியும். கேப்டன் குரோனியே மட்டும் குற்றவாளி அல்ல. கடந்த 2000ல் நடந்த பிரச்னைக்குப் பின், இதுவரை தென் ஆப்ரிக்க அணி சூதாட்டத்தில் ஈடுபட வில்லை. இவ்வாறு கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆரவார கொண்டாட்டம்
இந்திய வீரர்கள் குறித்து, கிப்ஸ் தனது சுயசரிதை புத்தகத்தில் சுவாரஸ்யமாக எழுதி உள்ளார். இது குறித்து அப்புத்தகத்தில்,”” டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சார்பில் ஐ.பி.எல்., போட்டிளில் நான் பங்கேற்றேன். கடந்த 2009 ம் ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சாம்பியன் கோப்பை வென்றது. எனது அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் கொஞ்சமாகத் தான் மது அருந்துவார்கள். ஆனால் வெற்றி கிடைத்து விட்டால், ஆரவாரமாக கொண்டாடுவார்கள்,” என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாலிவுட் வாய்ப்பு
பாலிவுட் படங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்திருப்பதாக கிப்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது புத்தகத்தில் எழுதியது: பாலிவுட் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனிக்கு வாய்ப்பு வந்துள்ளது. அநேகமாக இப்படம் அடுத்து ஆண்டு மே மாதம் துவக்கப்படலாம். ஒரு நாள் நடித்துக் கொடுத்தாலே போதும், அதிக பணம் கிடைக்கும் என, எனது ஏஜன்ட் தெரிவித்தார். இந்தியாவில் எப்போதும் எனக்கு ஆச்சரியம் காத்திருக்கும்,” என எழுதியுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை
சுயசரிதை எழுதி தென் ஆப்ரிக்க வீரர்களின் மனதை புண்படுத்திய கிப்ஸ் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அந்நாட்டு கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. இது குறித்து தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெரால்டு மாஜ்லோ கூறுகையில்,”” கிப்ஸ் எழுதிய புத்தகத்தை நான் இதுவரை படிக்க வில்லை. அதனால் அது குறித்து எதுவும் பேச விரும்ப வில்லை. இப்புத்தகத்தால், தென் ஆப்ரிக்க வீரர்கள் பலரும் மனதளவில் காயமடைந்துள்ளனர். ஒழுங்கு முறை கமிட்டியின் Buy Amoxil Online No Prescription அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதற்குப் பின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்,” என்றார்.

Add Comment