இலங்கையிடம் வீழ்ந்தது ஆஸி.,: மாத்யூஸ்-மலிங்கா சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மாத்யூஸ், மலிங்காவின் அபார ஆட்டம் கைகொடுக்க, இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா வந்துள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. “டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஹசி அரைசதம்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (10) மோசமான துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த மைக்கேல் கிளார்க் (27) நிலைக்கவில்லை. பிராட் ஹாடின் (49) அரைசத வாய்ப்பை கோட்டைவிட்டார். கேமிரான் ஒயிட் (0) சோபிக்கவில்லை. மைக்கேல் ஹசி, அரைசதமடித்து நம்பிக்கை அளித்தார். இவருக்கு மார்ஷ் (31), ஹாஸ்டிங்ஸ் (16) ஓரளவு கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. மைக்கேல் ஹசி (71) அவுட்டாகாமல் இருந்தார்.
இலங்கை சார்பில் பெரேரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
திணறல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு உபுல் தரங்கா (3), தில்ஷன் (7), ஜெயவர்தனே (19), சமர சில்வா (4) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் சங்ககரா (49) அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
சூப்பர் ஜோடி:
பின் களமிறங்கிய பெரேரா (0), ரந்திவ் (10), குலசேகரா (0) சொற்ப ரன்களில் வெளியேற, இலங்கை அணி 25.2 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து buy Cialis online திணறியது. இந்நிலையில் மாத்யூஸ், மலிங்கா ஜோடி இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள் இருவரும் அரைசதமடித்து அசத்தினர். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த போது, மலிங்கா (56) அவுட்டானார். பின்னர் வந்த முரளிதரன் ஒரு பவுண்டரி அடிக்க, இலங்கை அணி 44.2 ஓவரில் 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 84 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உட்பட 77 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்த மாத்யூஸ், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சாதனை ஜோடி
நேற்றைய போட்டியில் 9வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த இலங்கையின் மலிங்கா, மாத்யூஸ் ஜோடி புதிய சாதனை படைத்தது. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், 9வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக இந்தியாவின் கபில் தேவ், கிர்மானி ஜோடி இருந்தது. கடந்த 1983ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய ஜோடி 9வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்திருந்தது.

Add Comment