காம்பிர், லட்சுமண் தயார்: தோனி

buy Lasix online justify;”>நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க, காம்பிர், லட்சுமண் முழு உடற்தகுதியுடன் தயாராக உள்ளனர்,” என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இப்போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:
காம்பிர், லட்சுமண் இருவரும் முழு உடற்தகுதி பெற்று விட்டனர். அவர்கள் இன்றைய போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதனால் இந்திய அணிக்காக எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், முரளி விஜய் வாய்ப்பு இழக்கிறார். புஜராவும் திறமையானவர் தான். இப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்பதற்காக, இவர்கள் வருந்தத் தேவையில்லை.
கடந்த சில தொடர்களில் காயம் காரணமாக முழு அளவிலான அணி பங்கேற்க முடியவில்லை. இதனிடையே, எதிர்வரும் தென் ஆப்ரிக்கா மற்றும் உலக கோப்பை தொடர்களில் சாதிக்க, பவுலர்கள் காயம் அடையாமல் இருக்க வேண்டும். ஏனெனில் பேட்ஸ்மேன்களுக்கு 70 அல்லது 80 சதவீத உடற்தகுதி இருந்தால் போதும். பவுலர்களுக்கு 100 சதவீதம் உடற்தகுதி தேவை. இல்லையெனில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீச முடியாது.
இம்மைதானத்தில் சச்சின், தனது 50 வது சதத்தை எட்டுவார் என எதிர்பார்க்கிறேன். இதை கொண்டாட ஏற்கனவே தயாராகி விட்டோம். தவிர, கடந்த சில தொடர்களில் சரியாக விளையாடாத டிராவிட், மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்பதில் சந்தேகமில்லை.
வங்கதேச தொடரில் நியூசிலாந்து அணிக்கு என்ன நடந்ததோ, அது எங்களுக்கு தேவையில்லை. ஆனால் சிறப்பான சர்வதேச வீரர்களைக் கொண்டுள்ள, இந்த அணியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். சரியான திட்டமிடலுடன் 100 சதவீதம் நன்கு விளையாட முயற்சிப்போம்.
உத்தரவாதம் இல்லை:
டெஸ்ட் போட்டிகளில், அம்பயர் தீர்ப்புக்கு அப்பீல் செய்யும் மறுபரிசீலனை முறையை (யு.டி.ஆர்.எஸ்.,) பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதில் 100 சதவீத துல்லியமான முடிவுகள் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. இவ்வாறு தோனி தெரிவித்தார்.

Add Comment