சிறைக் கைதியின் புகைப்படம்:இஸ்ரேலிய ராணுவ வீரனுக்கு சிறை

கை விலங்கிட்டு கண்ணைக் கட்டிய நிலையில் இருக்கும் ஃபலஸ்தீன் சிறைக்கைதிக்கு நேராக துப்பாக்கியை குறிபார்க்கும் புகைப்படம் வெளியான சம்பவத்துடன் தொடர்புடைய இஸ்ரேலிய ராணுவ வீரனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரன் தனது பதவிக்கு ஒத்துவராத செயலைச் செய்ததற்காக ராணுவ நீதிமன்றம் 4 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சிறைக்கைதிகளுடன் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாயின. இதைப்போன்ற சம்பவங்களில் ராணுவ வீரன் ஒருவனுக்கு தண்டனை அளிக்கப்படுவது இது முதல் முறையாகும்.

போதைப் பொருளை கைவசம் வைத்திருந்ததாக Buy Ampicillin Online No Prescription கைதுச் செய்யப்பட்ட ராணுவ வீரனை பரிசோதித்த பொழுது மொபைல் ஃபோனில் இந்த புகைப்படம் பதிவாகியிருப்பது தெரியவந்தது.

புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த இதர இரண்டு ராணுவ வீரர்களைக் குறித்த விசாரணை நடந்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஃபேஸ் புக்கில் இஸ்ரேலிய முன்னாள் பெண் ராணுவ வீரர் ஒருவர் ஃபலஸ்தீன் சிறைக் கைதியுடன் ஃபோஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது.

ஒரு பெண் ஃபலஸ்தீன் கைதியின் முன்னால் இஸ்ரேலிய ராணுவவீரர்கள் நடனமாடும் காட்சி யூ ட்யூபில் வெளியானது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

Add Comment