காமன்வெல்த் போட்டி-தங்கம் வென்றவர்களுக்கு கேரள அரசு ரூ. 10 லட்சம்

அன்மையில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற கேரள வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற கேரள வீரர்களுக்கு Bactrim online பரிசுகள் வழங்கப்படும். தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 10 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ. 7.5 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கி கௌரவிக்கப்படும். மேலும், பயிற்சியாளர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு இடது முன்னணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. சில தவறுகள் நடந்துள்ளதை ஒத்துக் கொள்கிறோம். அடுத்த தேர்தலில் அந்த தவறுகள் ஏற்படாமல் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறினார்.

Add Comment