துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் க‌லைச் ச‌ங்க‌ம‌ம் 2010

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் Buy Bactrim ஒன்ப‌தாம் ஆண்டு விழா ம‌ற்றும் தீபாவ‌ளித் திருநாளையொட்டி க‌லைச் ச‌ங்க‌ம‌ம் 2010 எனும் பிர‌மாண்ட‌ நிக‌ழ்ச்சி 05.11.2010, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு துபாய் இந்திய‌ப் ப‌ள்ளியின் ஷேக் ராஷித் அர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இப்பிர‌மாண்ட‌ நிக‌ழ்வில் த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற எதிர்க்க‌ட்சி துணைத்த‌லைவ‌ர் பீட்ட‌ர் அல்போன்ஸ் த‌லைமை விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ இருக்கிறார்.

மேலும் பிர‌ப‌ல‌ நாட்டிய‌க் க‌லைஞ‌ர் சுதா ச‌ந்திர‌ன் வ‌ழ‌ங்கும் நாட்டிய‌ ம‌யூரி, பேராசிரிய‌ர் அறிவொளி த‌லைமையிலான‌ ப‌ட்டிம‌ன்ற‌த்தில் பிர‌ப‌ல பேச்சாள‌ர்க‌ள் உமாச‌ங்க‌ர் ம‌ற்றும் அன்ன‌பார‌தி, ந‌ளினி ம‌ற்றும் திரையுல‌க‌ப் பிர‌முக‌ர்க‌ள், துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ உறுப்பின‌ர்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ள‌து குழ‌ந்தைக‌ள் ப‌ங்கேற்கும் ப‌ல்வேறு க‌லை நிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெற‌ இருக்கின்ற‌ன‌.

இல‌வ‌ச‌ அனும‌திச் சீட்டுக‌ளை‌ சி. ஜெகநாதன், பொதுச் செயலாளர், துபாய் தமிழ்ச் சங்கம் 050 5787657 / 050 467 43 99 எனும் அலைபேசி எண்க‌ளில் தொட‌ர்பு கொண்டு பெற‌லாம்.

Add Comment