லலித் மோடியின் ரூ.100 கோடி அரண்மனைகளுக்கு ”சீல்”!

லண்டனில் தஞ்சமடைந்துள்ள லலித் மோடியின் இரு அரண்மனைகளுக்கு ராஜஸ்தான் அரசு சீல் வைத்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த லலித்மோடி நிதி முறைகேடுகள் செய்ததால் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது ரூ.450 கோடிக்கு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வாரியம் மற்றும் அமலாக்கப் பிரிவினரின் விசாரணையில் இருந்து தப்ப அவர் லண்டனில் பதுங்கியுள்ளார். விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு இந்த அமைப்புகள் பல முறை நோட்டீஸ் அனுப்பிவிட்டன.

ஆனால், இந்தியாவுக்கு வந்தால், தனது உயிருக்கு அண்டர்வேர்ல்ட் தாதாக்களால் ஆபத்து இருப்பதாகவும், இதனால் தன்னை சிபிஐ, அமலாக்கப் பிரிவு அல்லது கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் லண்டனில் வைத்தே விசாரித்துக் கொள்ளலாம் என்றும் கூறி வருகிறார்.

லலித் மோடி 2007ம் ஆண்டு அரசுக்கு சொந்தமான இரு அரண்மனைகளை விதிமுறைகளை மீறி வாங்கினார். ரூ.9 லட்சத்துக்கும், ரூ.21 லட்சத்துக்கு லலித் மோடி மற்றும் அவரது மனைவி மினால் மோடி பெயரில் இவை வாங்கப்பட்டன. இந்த அரண்மனைகளில் உண்மையான மதிப்பு ரூ. 100 கோடிக்கும் Doxycycline No Prescription அதிகமாகும்.

பாஜக ஆட்சியில் வசந்தரா ராஜே முதல்வராக இருந்த போது இவை வாங்கப்பட்டன. வசந்த ராஜேவுக்கு மோடி மிக மிக நெருக்கமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் ராஜஸ்தானில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் லலித் மோடியின் இரு அரண்மனைகளுக்கும் ஜெய்ப்பூர் மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

விதிகளை மீறி இந்த சொத்துக்களை லலித் மோடி வாங்கியதால் அவற்றை இப்போது மாநகராட்சி மூலம் ராஜஸ்தான் அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

Add Comment