கடையநல்லூர் யூனியனில் நலத்திட்ட உதவி வழங்கல்

கடையநல்லூர் யூனியனில் தமிழக அரசின் நலத்திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா யூனியன் சேர்மன் தீபக் தலைமையில் நடந்தது. ஒன்றிய பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதன்படி பெண் குழுந்தை நலத்திட்டத்தின்படி 138 பயனாளிகளுக்கு 20 லட்சத்து 97 ஆயிரத்து 600 ரூபாயும், மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 பேருக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உதவி திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் வீதம் 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், 12 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 3 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை யூனியன் சேர்மன் Buy Amoxil தீபக் வழங்கினார்.நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் மோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மாணிக்கவாசகம், விரிவாக்க அலுவலர் விஜயலட்சுமி, ஊர்நல அலுவலர்கள் கிருஷ்ணவேணி, அன்னலெட்சுமி மற்றும் யூனியன் பணியாளர்கள், பஞ்., உதவியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment