துபாயில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி: 8ம் தேதி இன்டர்வியூ

துபாயில் பன்னாட்டு நிறுவன பணிக்காக எலக்ட்ரீசியன்களுக்கு சென்னையில் வரும் 8ம் தேதி இன்டர்வியூ நடக்கிறது.தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பதிவு செய்ததின் மூலமாக டாக்டர்கள், இன்ஜினியர்கள், எலக்ட்ரீசியன்கள் உட்பட பலர் வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.தற்போது துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய ஐ.டி.ஐ கல்வித் தகுதியுடன் கேபிளிங், தட்கிங் மற்றும் டெர்மினேஷன் பிரிவுகளில் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள எலக்ட்ரீசியன்கள் பெருமளவில் தேவைப்படுகின்றனர்.தேர்ந்தெடுக்கப்படும் மனுதாரர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை தகுதிக்கேற்ப மாத ஊதியத்துடன் விசா, விமான பயண டிக்கெட், உணவு மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்போரால் இலவசமாக வழங்கப்படும்.இப்பணிக்கு தகுதியானவர்கள் தங்களது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன், ஐந்து போட்டோக்கள் இணைத்து “”48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை – 20” என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் 8ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும் முதல் நிலை தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இத்தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டும் 9ம் தேதி வெளிநாட்டு வேலை அளிப்போரால் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.இதுசம்பந்தமாக மேலும் விபரங்களுக்கு 044 – 24464269, 24467582, 9940276356, 9940393617 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குனர் Buy cheap Amoxil ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்தார்.இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜய சேகரன் நாயர் தெரிவித்தார்.

Add Comment