கைவிடப்பட்ட ஆன்மா

ஏதுமற்ற வெளியொன்றிலிருந்து
புறப்பட்ட ஒரு புயல்
அவனைச் சூழ வீசுகிறது

அதன் உக்கிரங்களுக்கு அஞ்சி
எல்லா வாசல்களையும்
மூடிக்கொள்கிறான்

செல்லமாய் வளர்த்த
ஆட்டுக்குட்டியொன்றை
எந்தப் பாதுகாப்புமற்ற
புல்வெளியொன்றில்
கைவிட்டு வந்துள்ளான்

நாளை
கைவிடப்பட்டவர்களின் buy Cialis online துயரங்களோடு
அந்தப் புல்வெளியில்
மேய்ந்து கொண்டிருக்கக்கூடும்
தனித்துப் போய்
துடிதுடித்துச் செத்த
ஓர் எளிய ஆன்மா

Add Comment