மின் விடுமுறை திட்டம் அமலானது 40 ஆயிரம் ஆலைகள் மூடல்

கோவை : மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மின்வாரியம் அறிவித்த மின் விடுமுறை திட்டம் நேற்று நடைமுறைக்கு வந்தது. கோவையில் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் நேற்று இயங்கவில்லை. இதனால் ரூ.200 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கான மின்வெட்டு 40 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் கட்டாய மின்தடையும், மாநிலத்தின் இதர பகுதிகளில் 4 மணி நேர மின்தடையும் அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்பட்டது. வணிக பயனீட்டாளர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் உயர் மின்னழுத்தம் நுகரும் தொழிற்சாலைகளுக்கு மின் விடுமுறை அளிக்கும் online pharmacy without prescription திட்டம் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமைதோறும் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை மெட்ரோ, புறநகர், உடுமலை மற்றும் வெள்ளிக்கிழமை நெல்லை, திருப்பூர், நீலகிரி மண்டலம் மற்றும் சனிக்கிழமை திருச்சி, விழுப்புரம், வேலூர் மண்டலம் மற்றும் திங்கள்கிழமை ஈரோடு மண்டலத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் செவ்வாய்கிழமை சென்னை தெற்கு மண்டலம், வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் பகிர்மான வட்டம், புதன்கிழமை சென்னை வடக்கு மற்றும் மதுரை மண்டலங்களில் மின் விடுமுறை அளிக்கப்படுகிறது.

கோவை மண்டலத்தில் மில்கள், இன்ஜினியரிங், விசைத்தறி, லேத் ஒர்க்ஷாப், எலக்ட்ரோ பிளேட்டிங் உள்ளிட்ட 40 ஆயிரம் பெரிய, சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன. மின் விடுமுறை அமலானதால் ஏறக்குறைய அனைத்து ஆலைகளுமே நேற்று இயங்கவில்லை. இதன்மூலம் 800 மெகாவாட் வரை மின்சாரம் சேமிக்கப்படும். மின் விடுமுறை காலை 6 மணி முதல், நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

தொழிலாளர்கள் பணிக்கு வராததால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை, கணபதி, பீளமேடு, அரசூர் பவுண்டரி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்க(கொடிசியா) தலைவர் கந்தசாமி கூறுகையில், ‘‘தொழில் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்றுதான் மின்விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய தார்மீக கடமை, தொழிற்சாலைகளுக்கு உண்டு. வாரத்தில் ஒரு நாள் அமல்படுத்தப்படுவதால் ஏற்கனவே இருந்துவந்த மின்வெட்டு 50% குறைய வாய்ப்புள்ளதால் மற்ற நாட்களில் உற்பத்தி சீராக இருக்கும். வாரத்தில் 2 நாட்கள்(ஞாயிறு உள்பட) கட்டாய மின்விடுமுறை என்பதால் தொழிற்சாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதற்கு பதிலாக ஏதாவது ஒருநாள் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதியை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் ‘‘ என்றார்.

தொழிற்சாலைகள் கண்காணிப்பு

கணபதி, வேலாண்டிபாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மின் விடுமுறையை மீறி இயங்கின. மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு, மேற்பார்வை பொறியாளர் திருமூர்த்தி உத்தரவின் பேரில் மின்வாரியத்தினர் இங்கு ரெய்டு நடத்தினர். தொழிற்சாலைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர். எந்த பகுதியில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதோ அந்த பகுதியில் ஆய்வு நடத்தி விதிமுறை மீறி இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு கூறுகையில், ‘‘தொழிற்சாலைகள் மின் விடுமுறை முழுமையாக கடைபிடிக்கவேண்டும். சிலர் விதிமுறை மீறி தொழிற்சாலைகளை இயக்கினால் மின் சிக்கனத்தை மேற்கொள்ள முடியாது. மாவட்ட அளவில் மின்வாரிய அதிகாரிகள் மின் விடுமுறை நாட்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்‘‘ என்றார்.

thanks 

seithy

Add Comment