பரப்பரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி

துபாயில் நேற்று நடந்த buy Ampicillin online தென் ஆப்ரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 4வது ஒரு தின ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வெற்றிக்கு தேவையான ரன்களை ஒரு பந்து மீதமிருக்கையில் எடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக முதலில் பேட் செய்த தெ.ஆப்ரிக்கா, 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன் ஸ்மித் 92 ரன்களும், டி வில்லர்ஸ் 49 ரன்களும் எடுத்து அணியின் ரன் எண்ணிக்கை உயர காரணமாக இருந்தனர். பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், தொடக்க வீரர் இம்ரான் பர்ஹத் சொற்ப ரன்களில் இழக்க, ஹபீஸும், யூனுஸ் கானும் நிதானமாக ஆடினர். ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து இருந்த பாகிஸ்தான், இதில் தோற்பது நிச்சயம் என்ற நிலையில், களமிறங்கிய புது முக பந்து வீச்சாளர்கள், ரியாஸும், ஹைதரும் பொறுமையாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களை எடுத்து தங்கள் அணி வெற்றி பெற உதவினர். சிறந்த விளையாட்டு வீரராக யூனுஸ் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட போட்டியில் பாகிஸ்தான்,தென் ஆப்ரிக்கா அணிகள் தலா இரு வெற்றிகள் பெற்றுள்ளன. கடைசி ஒரு நாள் ஆட்டம் 8ந் தேதியன்று துபாயில் நடைபெற இருக்கிறது.

Add Comment